இறைவனிடம் கையேந்துவோம்
இறைவனிடம் கையேந்துங்கள்
******************
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை
பொருமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிசத்தை மூடுவது இல்லை
EM நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஏகத்துவத்தை நிலை நாட்டும் பாடல் இது
இப்பாடலை ரசனையோடு செவியுற்றவர்கள்
இதே கருத்தை குர்ஆன் சுன்னா ஆதாரங்களுடன் பறைசாற்றும் போது வழிகேடர்கள் என்று தூற்றுவது அறிவீனத்தின் உச்சம்
இறைவன் அல்லாத ஒருவரிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்
அல்லது ஒரு மகானின் பொருட்டால் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்
இறைவனே தனது பொக்கிசத்தை அடியார்களிடம் மூடினாலோ அல்லது இறைவனிடம் கையேந்தும் அடியானிடம் இறைவன் தர இயலாது என்று மறுத்து கூறியிருந்தாலோ பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்படலாம் என்பதே EM நாகூர் ஹனீபா பாடிய இப்பாடலின் மூல சாராம்சமாகும்
அவ்வகையில் குர்ஆன் சுன்னாவில் எங்குமே தனது அருள் பொக்கிசத்தை சில நேரங்களில் மூடுவதாக இறைவன் குறிப்பிடவில்லை
நல்லடியார் மூலம் கையேந்தினால் மட்டுமே அடியார்கள் முறையிடும் பிரார்த்தனையை
உடனே ஏற்பேன் என்று எந்த நிபந்தனையும் இறைவன் விதிக்கவில்லை
ஒரு மகானின் பரிந்துரையை ஏற்றே ஆக வேண்டும் என்ற அவசியமும் இறைவனுக்கு இல்லை
காற்று நீர் போன்ற எந்த அடிப்படை தேவைகளையும் பிற அடியார்கள் மூலம் பிரார்த்தனை செய்வதின் மூலமாக இறைவன் எவருக்கும் இதுநாள் வரை வழங்கிக்கொண்டிருக்கவில்லை
படைப்பினங்களுக்கு என்ன தேவை
எந்தளவு தேவை என்பதை பிறரின் பரிந்துரை மூலமே அறிய முடியும் என்ற ஞானத்தின் பலவீனமும் இறைவனுக்கு இல்லை
ஆயிரம் நல்லடியார்கள் ஒன்று சேர்ந்து
ஒரு அடியான் வளம் பெற இறைவனிடம் பரிந்துரை செய்தாலும் இறைவன் நிர்ணயித்துள்ள விதியில் ஒரு அடியான் வறுமையை தழுவுவான் என்று தீர்மானித்திருந்தால் ஆயிரம் நல்லடியார்கள் ஒன்றிணைந்து ஒரு அடியானுக்கு செய்யும் கோரிக்கையும் பயன் தரப்போவதில்லை
ஒரு அடியான் தனது தேவைகளை இறைவனிடம் முறையிடாவிட்டால் இறைவன் அந்த அடியான் மீது கோபமடைகிறான் என்ற அழகிய எச்சரிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்திருக்க
இறைவனிடம் பிரார்த்தனை செய்ய ஒரு நல்லாடியாரின் துணை தேவை என்ற மார்க்க மூடர்களின் குருட்டு வாதங்களும் இணை வைத்தலை ஊக்குவிக்கும் வாதங்களும்
ஒரு முஸ்லிமுக்கு எவ்வகையிலும் மறுமையில் பயன் தரப்போவது இல்லை
இறைவனிடம் மட்டுமே ஒரு அடியான் கையேந்த வேண்டும் என்று ஆழமான இறைநம்பிக்கை விதைக்கும் நபர்களின் மீது வெறுப்பூட்டுவது சாத்தானின் சாதுர்யமான வலையில் வீழ்ந்தவர்களே
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
5-12-2025
Comments
Post a Comment