வெறுமை

                வாழ்வில் வெறுமை   
                        **************

மனிதனுக்கு வறுமையை விட 
வலி மிகுந்தது வெறுமையாகும்

ஆர்வத்துடன் செய்து வந்த வேலைகளை கூட 
ஆர்வம் இல்லாது செய்யும் சூழலையே 
வெறுமை என்று சொல்லப்படும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இது போன்ற 
சில நிமிடங்கள் வந்து போகும் 

எதில் ஈடுபட்டாலும் அதில் ஓர் ஈர்ப்பு இருக்காது 
ருசியான பானங்களும் உணவுகளும் ருசியற்றதாக தோன்றும் 
கூட்டத்திற்கு இடையில் அமர்ந்திருந்தாலும் 
கண்கள் எதையோ உற்று நோக்கி கொண்டிருக்கும்

சுற்று வட்டாரத்தில் கேட்கும் பேச்சுக்களும் 
அர்த்தமற்ற ஓசையாக செவியுறும்


இந்நிலையில் இருந்து விடுபடாது விட்டால் 
இறுதியில் விரக்தி ஏற்படும்

அந்த விரக்தியே மனிதனை மனநோயாளியாக 
மாற்றி விடும் 


இந்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள இறைவனின் நினைவே உறுதுணையாக அமையும்


காரணம் இவையாவும் மனிதனின்  இதயத்துடன் தொடர்புடையதாகும் 

கீழ் காணும் குர்ஆன்  வசனங்கள் அதற்கான விளக்கத்தையும் தீர்வையும் கற்றுத்தருகிறது  

சிந்தனையுடன் படியுங்கள் 
மனநிம்மதி ஏற்படும் 
இன்ஷா அல்லாஹ்


اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ‏
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?


وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.


الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏
அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ‏
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.


فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.


فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.


وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
(அல்குர்ஆன் : 94: 1 முதல் 8)

       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           31-8-2025





Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்