இமாம்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும்

         இமாம்களும் பள்ளிவாசல் 
                     நிர்வாகிகளும்
                 ********************
                 கட்டுரை எண்  1520
                       *************


சிர்க் என்ற பெரும்பாவமும் பித்அத்துகளும் 
புனிதமாக கற்பனையில்  கருதப்படும் சுபுஹான மவ்லித் போன்ற அரபி பஜனை பாடல்களும்   சமூகத்தில் ஒழியாது இருப்பதற்கு பல இமாம்கள் எந்தளவு குற்றவாளிகளாக  உள்ளார்களோ 
அதே அளவு பள்ளிவாசலின் பொருப்புகளை வகிக்கும்  நிர்வாகிகளும் காரணமானவர்களே


காரணம் இமாம்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே 
ஆனால் இமாம்கள் எடுத்துச்சொல்வதை பள்ளிவாசலில்  நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் இறையில்லத்தின் பொருப்பு வகிக்கும்  நிர்வாகிகளே

நிர்வாகிகள் ஒத்துழைப்பு தராது 
பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம்களால் 
எதையும் சுயமாக நடைமுறைக்கு கொண்டு வர இயலாது என்பதே நடை முறை உண்மை 

ஊதியம் பெறும் இடத்தில் இருப்பவர்கள் 
ஊதியம் தரும் நிர்வாகிகளின்  அதிகாரத்தை நிச்சயம் பெற இயலாது 

நிர்வாகிகளின் திருப்திக்கும் கட்டளைக்கும் தகுந்தவாறு  பேசுவதற்கு இமாம்களுக்கு 
குர்ஆன் சுன்னா தேவையில்லை 

தங்களின் விருப்பத்திற்கு ஏற்று ஜும்மா மேடையில்  பேசுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்திற்க்கு மார்க்கம் படித்த ஆலீம்களும் தேவை இல்லை 

இந்த இமாம் பணியை விட்டு நீங்கி விட்டால் 
நம் ஜமாதுக்கு ஏற்று  வேறு இமாம் அந்த இடத்தை நிரப்புவார் என்ற கீழ்நிலை எண்ணமே பள்ளிவாசல் நிர்வாகிகளை பித்அத்துகளில் இருந்து இன்றும் விடுபடாது வைத்துள்ளது  


ஐந்து நேர தொழுகையை  தமிழ் மொழி அறியாத வடநாட்டு இமாம்களை வைத்து நடத்தி விடலாம் என்ற எண்ணமே மக்களை சத்தியத்தை அறிவதில் இருந்து  சமீபகாலமாக  தூரமாக்கியுள்ளது  



اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ 
اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்களே  இறையில்லங்களை  பராமரிப்பவர்களாவர்  அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்

(அல்குர்ஆன் : 9:18)


مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِ‌ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ  وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

தாங்கள் நிராகரிப்பாளர்கள் என்பதற்குத் தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு இறையில்லங்களைப் பராமரிக்கும் உரிமை இல்லை
அத்தகையவர்களின் எல்லா  செயல்களும் பாழாகிவிட்டன
மேலும்  அவர்கள் நரகத்திலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்

(அல்குர்ஆன் : 9:17)



        நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                             28-8-2025


Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்