லைலதுல் கத்ரு
லைலதுல் கத்ரு இரவை
நாசமாக்கி விடாதீர்
***************
J . யாஸீன் இம்தாதி
=========
இஸ்லாமிய மாதங்களில் சிறந்தது ரமலான் மாதம்
அந்த ரமலான் மாதத்தில் சிறந்தது லைலதுல் கத்ரு எனும் ஓர் இரவு
அந்த ஒரு இரவின் மகத்துவத்தால் தான் ரமலான் மாதமே சிறந்து விளங்குகிறது
லைலதுல் கத்ரு என்ற ஓர் இரவு இல்லை என்றால்
இரவு தொழுகை இல்லை
கடமையான நோன்பு இல்லை
ரய்யான் என்ற சுவனம் இல்லை
சாத்தான்கள் பூட்டப்படும் சூழல் இல்லை
இஃதிகாப் இல்லை
தூய முஸ்லிம்கள் இல்லை
நபிகளார் இறை தூதர் இல்லை
சுருங்க சொன்னால்
இஸ்லாம் என்ற கொள்கையே தூய நிலையில் இருந்திருக்காது
அத்தகைய நாளே லைலதுல் கத்ரு எனும் புனித இரவு
அந்த இரவின் மகத்துவத்தை அடைய ஒற்றைபடை இரவுகளின் மூலம் பெற வேண்டிய பாவ மன்னிப்பை
இறைவனின் அருளை
இறைவனின் நெருக்கத்தை
இழந்தவன்
நிச்சயம் நஷ்டம் அடைந்த மனிதனே
இதை மனதில் வைத்து லைலதுல் கத்ரு எனும் இரவை
கழிப்போம் கடப்போம்
இன்ஷா அல்லாஹ்
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்
(அல்குர்ஆன் : 97:2,3,4,5)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment