ஆடைகளும் இல்லத்தரசிகளும்

   ஆடைகளும் இல்லத்தரசிகளும்

                    ****************
           கட்டுரை எண் 1410
                        --------------
         J . யாஸீன் இம்தாதி
                       =========
ஓர் இல்லத்தில் குப்பைகள் தூசிகள் சேர்ந்திருப்பதை விட உடுத்தாமல் பீரோக்களில் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகளே அதிகமாக இருக்கும்

குறிப்பாக பெண்கள் உடுத்தாத ஆடைகளே அவைகளில் அதிகமாக இடம் பெற்றிருக்கும்

ஒரு பெண்ணுக்கு குறைந்த பட்சம் ஐம்பது சேலைகளும் ஐம்பது பாவாடைகளும் ஐம்பது சுடிதார்களும் ஐம்பது நைட்டிகளும் பயன் படாமல் பீரோக்களில் ஒதுங்கி இருக்கும் 

உடுத்தாத ஆடைகளை ஆடை வாங்குவதற்கு வழி இல்லாமல் இருக்கும் வரியோருக்கு கொடுக்கவும்  மாட்டார்கள் தாங்களும் அதை  உடுத்தவும் மாட்டார்கள்

புத்தாடைகளை வாங்கி குவிப்பதில் குடும்ப பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் ஏற்கனவே இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகளில் நிச்சயம் இருக்காது

வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அப்புறப்படுத்தினால் கூட இல்லங்கள் தூய்மையாக இருக்கும்

குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்கு பத்து ஆடைகள் இருந்தால் கூட வருடம் முழுவதும்  மாறி மாறி அணிவதற்கு அதுவே  போதுமானதாகும்

ஓர் ஆடை வாங்கும் போது பயன் படுத்தாத ஆடைகளை ஒதுக்கினாலே பீரோக்கள் தூய்மையாக இருக்கும்

எனவே புதிய  துணிகளை எடுப்பதில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விட்டு கைவசம் இருக்கும் ஆடைகளை அணியும் விசயத்திலும் அல்லது அதை வழி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் விசயத்தில் அல்லது அதை அப்புறப்படுத்தும் விசயத்திலும் கவனம் செலுத்துங்கள்

பூச்சிகளும் பாச்சான்களும் பீரோக்களில் உள்ள துணிகளில் குடியிருப்பதை விட
குறைந்த பட்சம் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆடைகளை துண்டுகளாக்கி அவைகளை கொண்டு தலையணை செய்தால் கூட அன்றாடம் அது குடும்பத்திற்கு  பயன் தரும்

ஆடை என்பது மானத்தை மறைப்பதற்கும் அலங்காரத்தை வெளிப்படுத்துவதற்கும் தானே தவிர பீரோக்களை நிறைப்பதற்கும் அழுக்கு மூட்டைகள் போல் வருடா வருடா ஒதுக்கி வைப்பதற்கு அல்ல

உடுத்தாத ஆடைகள் கைவசம் இருப்பதால் இந்த பெருநாளுக்கு புத்தாடை எடுக்க வேண்டாம்  என்று கணவனிடம் எடுத்து கூறிய ஒரு பெண்ணை பார்ப்பது உலகின் எட்டாவது அதிசயம்

يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا‌  وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌  ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே  நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும்  (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக

         (அல்குர்ஆன் : 7:26)

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்