வெற்றி களிப்பில் திமுக பெற வேண்டிய பாடம்
வெற்றி களிப்பில்
திமுக பெற வேண்டிய பாடம்
***************
J . யாஸீன் இம்தாதி
=========
மக்கள் சேவை செய்யும் கட்சி மக்கள் விரோத கட்சி என்ற பார்வையை தாண்டி ஆட்சி செய்யும் கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவே மாற்று கட்சி வெற்றி பெறும் சூழல் நம் நாட்டில் தொடர்கிறது
தேர்தல் வெற்றியை குதூகலமாக கொண்டாடும் தகுதி எந்த கட்சிக்கும் இல்லை
தமிழகத்தில் திமுக ஆட்சியே மலர வேண்டும் என்பதற்காக வாக்கு செலுத்திய மக்களை விட பீஜேபியின் தத்துப்பிள்ளை அதிமுக ஆட்சி தொடர கூடாது என்பதற்காகவும் மாற்று வழியின்றி திமுகவுக்கு வாக்களித்தவர்களே அதிகம்
இதை திமுக தலைமையும் அதன் தொண்டர்களும் உணர வேண்டும்
சுதந்திர அடைந்த வருடம் முதல் திமுக பல முறை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதை சிந்தித்தாலே இதை உணர இயலும்
திமுக ஆட்சியின் மீது நாட்டு மக்களுக்கு நல்ல பார்வை இருந்திருந்தால் திமுக ஆட்சியே கடந்த காலங்களில் நிலைத்திருக்க வேண்டும்
ஆனால் அது போன்ற நிலை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்றும் இருந்தது இல்லை
தற்போதும் அதிமுகவும் பல இடங்களை கைபற்றி இருப்பது இதை உறுதி படுத்துகிறது
கூட்டணி கட்சிகளின் உறுதுணையாலும் மக்களுக்கு அதிமுக ஆட்சி மீது எற்பட்ட அதிருப்தியாலும் பீஜேபி ஆட்சி மீது ஏற்பட்டுள்ள வெறுப்பாலும் திமுகவின் வெற்றி இம்முறை மாற்று வழியின்றி பிரகாசித்துள்ளது
இந்த சூழல்களை கருத்தில் கொண்டு இனி அமைய போகும் திமுக ஆட்சி மக்களாட்சியாக மாற வேண்டும்
தேர்தல் அறிக்கைகளில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவெற்றப்பட வேண்டும்
குடியுரிமை திருத்த சட்டத்தை புறம் தள்ள அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும்
மேலிடத்தில் BJP ஆட்சி இருப்பதால் அவர்கள் கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிக்கும் தந்திரத்தை முற்றிலும் கை விட வேண்டும்
கொரோனா தொற்று நடவடிக்கைகளை அறிவுப்பூர்வமாக மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்காது ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment