கொரோனாவும் எதிர் அணியும்
கொரோனாவும்
எதிர் அணிகளும்
***************
J . யாஸீன் இம்தாதி
=========
கொரோனா ? அப்படி ஏதும் இல்லை
அது ஒரு பித்தலாட்டம்
கொரோனா ? ரெம்ப ஜாக்கிரதையா இருங்க
அது வந்துட்டா பிழைப்பதே கஷ்டம்
இப்படி இரு வகையாக கொரோனாவை பரப்பும் மக்களே சமூகத்தில் அதிகம் உள்ளனர்
எந்த ஒரு விளைவையும் அதன் பாதிப்புக்கு ஏற்ற விதத்தில் எச்சரிக்கை செய்தால் பாமரர்கள் அதில் முழு அளவுக்கு கவனமாக இருக்க மாட்டார்கள் என்பதற்காக கொரோனாவால் ஏற்படும் விளைவை விட பல மடங்கு பெரிது படுத்தி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை பல மருத்துவர்கள் தருகின்றனர்
இந்த மருத்துவர்களை கண்டிக்கிறோம் எனும் பெயரில் வேறு பலர் கொரோனா பாதிப்புகளை முழுமையாக மறுத்து அப்படி ஒரு நோயே இல்லை என்றும் அது இலுமிநாட்டிகளின் சதி என்றும் வழமை போல் மறுத்து பேச முனைந்து விடுகின்றனர்
இதன் காரணத்தால் தான் எதார்த்தமான நிலையை மக்கள் கண்டு கொள்வது இல்லை
கடந்த முறை எச்சரிக்கையை பேணி நடந்தவர்களும் இந்த முறை கவனமற்று உள்ளனர்
இறைவனின் ஆற்றலை பற்றிய முழுமையான புரிதலும் பகுத்தறிவை சரியாக பயன் படுத்த தெரியாத அறிவிலிகளும் அதிகார மட்டத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கும் வரை கொரோனா நாடகம் தொடரவே செய்யும்
கொரோனா தாக்கி இறந்தவர்களும் மனித சமூகத்தில் உண்டு
கொரோனா தாக்கியும் அதை வென்று உயிரோடு இருப்பவர்களும் அதிகம் உண்டு
உலகளலவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மாண்டவர்களை விட அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களே எண்ணிக்கையில் மிகவும் அதிகம்
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் இறை தூதர்களை அனுப்பினோம் அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம்
அவர்கள் ( திருந்தி ) பணிந்து வரும் பொருட்டு ( இவ்வாறு சோதிக்கிறோம்)
(அல்குர்ஆன் : 6:42)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment