நீங்களும் கதை எழுதலாம்

     நீங்களும் கதை எழுதலாம்

                 ******************
            J . Yaseen imthadhi
      Bismillahir Rahmanir Raheem
                            *****

கற்பனைகளின் கலவை
என்பதே கதையின் சாரம்

இதை மையமாக வைத்தே திரைப்படங்கள் தயாரிக்க படுகிறது

அதன் விளைவே நடைமுறைக்கு எதிரான பல காட்சிகள் திரைப்படங்களில் சித்தரித்து காட்டப்படுகிறது

இந்நிலை இல்லாது உலகின் நடைமுறை காட்சிகளை உற்று நோக்கும் ஒருவனாலும் எதார்த்தமான  கதைகளை அவனது கற்பனையை கொண்டு திரைப்படமாக  உருவாக்க இயலும்

தினமும் சந்தைகடைக்கு செல்லும் நபரா நீங்கள்  ?

அங்கே சென்று இரு மணிநேரம் உங்களை சுற்றி நடக்கும் காட்சிகளை  கவனமாக உற்று நோக்குங்கள்

சந்தைக்கடையில் வியாபாரிகள் நுகர்வோரை  அணுகும் முறை

நுகர்வோர் வியாபாரிகளை அணுகும் முறை

நுகர்வோர்களின் பண்பாடு ஆடை பேச்சு கள்ளத்தனம்

எற்றுமதி இறக்குமதி வெளியூர் மக்களின் குணநலன்கள்

தர்மம் பெற சந்தையை  சுற்றும் பிச்சைகாரர்களின் தன்மைகள்

பொது இடத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள்

இப்படி பல தரப்பட்ட காட்சிகளை உற்று நோக்கினால் புரிய முடியும்

இவைகளை கற்பனையில் கலந்து இணைக்க வேண்டிய அறவுரை பகுதிகளை  இணைத்து அதற்கு ஏற்ற வசனங்களை வடித்து கதாபாத்திரங்களை உருவாக்கி தயாரிப்பதே திரைப்படம்

நம் சமூகத்தில் சிந்தனைவளம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி சமூகத்தில் இருக்கும் தனவந்தர்கள் இது போல் விசயங்களுக்கு உதவி செய்தால் வழிகேடுகளையே கதைகளாக காட்டும் திரைப்பட துறை மூலம் மனித சமூகத்திற்கு நல்வழிகளை காட்டவும் இயலும் புரட்சியை ஏற்படுத்தவும் முடியும்

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்