காலை சிந்தனை எட்டு

   காலை சிந்தனை பாகம் எட்டு
             மனக்கழிவுகளை 
            கலையாத மனிதன்
         <><><><><><><><><><>
          J . Yaseen iMthadhi
                     •••••••••••

ஒரு மனிதனின் உடல் காலை எழுந்தவுடன் அவனது உடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியே தள்ளுவதற்கு உணர்சிகளை தானாகவே தந்து விடுகிறது

ஒரு நாள் அவனது கழிவுகள் உடலில் தங்கினாலும் அதை அருவெறுப்பாக அந்த மனிதனே கருதும் மனநிலையை சிக்கலை உருவாக்கி விடுகிறது

உடல் செய்ய  வேண்டிய வேலைகளை மனிதனின் மனம் நாடாவிட்டாலும் தானாகவே அன்றாடம் அவைகளை நிறைவேற்றி விடுகிறது

ஆனால் மனிதனின் மனம் அன்றாடம்  செய்ய வேண்டிய வேலைகளை தவறுகிற காரணத்தினால் தான் மனித வாழ்வில்

துரோகம்
வஞ்சம்
தீய எண்ணம்
கள்ளம்
ஒழுங்கீனம்
பகைமை
பொறாமை

போன்ற அனைத்து கழிவுகளும் மனித வாழ்வை நாசமாக்கி வருகிறது

يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌  وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏ 

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்
அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்
மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை

      (அல்குர்ஆன் : 4:120)

       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்