ஆளுமையில் ஆளுமை செலுத்துவோம்
ஆளுமையில் ஆளுமை
செலுத்துவோம்
*******
04-10-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1379
====================
நாங்கள் யார் தெரியுமா ?
இந்தியாவை உருவாக்கிய முகலாய மன்னர்களின் பரம்பரை
வெள்ளையனை விரட்டி அடித்த தியாகிகளின் பரம்பரை
வெள்ளையனை விரட்டி அடிக்க ராணுவத்திற்கு சொத்துக்களை தியாகம் செய்த பரம்பரை
தேசிகொடியை வடிவமைத்த அன்னை சுரய்யாவின் பரம்பரை
மேடைகள் தோறும் உணர்ச்சிகள் பொங்க முஸ்லிம் தலைவர்கள் அடிக்கடி பேசும் வீரவசனங்களின் சில வசனங்களே இது
ஆக ஆண்ட பரம்பரை
இந்தியாவை ஆள வேண்டிய பரம்பரை
இன்று ஆளும் அரக்கர்களின் பிடியில் சிக்கி பல இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கும் பரம்பரையாக மாற்றப்பட்டு விட்டது
அரசின் சலுகைகளை கேட்காமலேயே முன்வந்து சலுகைகளை வழங்கப்பட
வேண்டிய பரம்பரை
தற்போது இருக்கும் உரிமைகளை கூட
பறி கொடுத்து பரிதாபமாக நிற்கும் பரம்பரையாக மாறி விட்டது
நாட்டை உருவாக்கிய பரம்பரை நாடற்றவர்களாக ஆக்க துடிக்கும் குடியுரிமை சட்டத்தை எதிர் கொண்டு நிற்கும் பரம்பரையாக மாறி விட்டது
உருவாக்கிய நாட்டை ஒதுக்கி விட்டு இரண்டாம் நிலை நாட்டில் கூலி வேலை பார்க்க படை எடுக்கும் பரம்பரையாக மாறி விட்டது
இந்நிலை ஏன் ?
அரசியல் என்பதே ஒரு சாக்கடை அந்த சாக்கடையில் முஸ்லிம்கள் கால் வைக்கலாமா என்று மார்க்கப்போர்வையில் பல காலம் மூளை சலவை செய்து முஸ்லிம் சமூகத்தில் ஒரு கூட்டத்தையே சமூக அக்கரை இல்லாதவர்களாக மாற்றி விட்டனர்
அரசியலில் கால் வைத்து
முழு அரசியல்வாதியாகவே நிறம் மாறி சமூகத்தை மறந்து சமூகத்தை காட்டியே தன்னையும் தன் கட்சியையும் வளர்த்தி கொண்டது சில கூட்டம்
இதன் விளைவு ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மதிப்பிட முடியாத ஓட்டுக்களை கூறு போட்டு அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கும் அவர்கள் அனுபவித்து வரும் பதவிகளுக்கும் வலுவை சேர்த்தார்கள்
அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிகளாக சமூகத்தையும் இதன் மூலம் மாற்றி விட்டார்கள்
இனியும் இந்நிலை தொடர வேண்டுமா
இனிமேல் பயணிப்போம் அரசியல்வாதியாக மாறவே பயணிப்போம்
தேர்தல் நேரங்களில் அனைத்து இயக்கங்களும் தோல் மீது கை போட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களையும் குவித்து அதை ஒரே ஆயுதமாக பயன் படுத்த திட்டம் தீட்டுவோம்
ஆளுமையில் யார் வந்தாலும் கவலை இல்லை
ஆனால் ஆளுமையில் வருபவன் நம் முஸ்லிம் சமுதாய ஓட்டுக்கள் மூலம் தான் வந்தான் என்ற சிந்தனையை அவனுக்கே ஏற்படுத்த வேண்டும்
நீங்கள் ஓட்டு போட்டால் இதை செய்வேன் அதை செய்வேன் என்று பேரம் பேசி நாட்டு மக்களை நடுவீதியில் தங்களை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக மாற்றிவிட்ட அரசியல் கட்சிகளிடம்
நாங்கள் ஓட்டு போடுவதாக இருந்தால் இதை செய்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனை போடும் நிர்பந்த கட்டத்தை நாமே உருவாக்குவோம்
இதற்கு தடையாக இருக்கும் சமுதாய தலைவர்களை தனிமைபடுத்தி அவர்களையும் சமூகத்தில் ஒருவராக மட்டுமே மதிப்போம்
தேர்தல் களத்தில் ஓர் அணியில் திரள தயங்கும் தலைவர்களை திரள மறுக்கும் தலைவர்களை திரளுவதை தடுக்க சூழ்ச்சி செய்யும் தலைவர்களை
இதர கட்சிகளை போற்றுவதை முக்கிய பணியாக கருதும் தலைவர்களை தள்ளி வைத்து விட்டு சமூக பணியை மார்க்க பணியாக கருதும் நபர்களை அரியணையில் எற்ற சபதம் எடுப்போம்
இது சாத்தியமா இது இயலுமா என்று என்று தர்க்கம் செய்வதை மாத்திரம் திறமையாக கருதும் நபர்கள்
சமூகம் பாதிக்கப்படும் போது மாத்திரம் போராட்ட களங்களில் ஒரே மேடையில் கைகோர்த்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது மாத்திரம் எப்படி சாத்தியமாகிறது என்பதை அறிவுப்பூர்வமாக தெளிவு படுத்தட்டும்
அல்லது பொருத்தமற்ற விவேகம் இல்லாத கருத்து கூறாது நம் பதிவை கடந்து விடட்டும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment