முஸ்லிம் சமூக எழுச்சி வீழ்ச்சி அரசியல் அதிகாரமே

முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சியும்
எழுச்சியும் அரசியல் அதிகாரமே
                       *******
                 03-10-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1378
           ====================

காங்கிரஸ் ஆட்சியில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது

பீஜேபி ஆட்சியில் இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்டப்பட்டது

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இவ்விரு கட்சிக்கும் வேறுபாடு என்ன என்பதையும் இவ்விசயத்தில் யார் முஸ்லிம் சமூகத்திற்கு உதவியாக  நின்றார்கள் இனியும்  நிற்பார்கள்  என்பதையும் சற்று சிந்தித்தால் முஸ்லிம் சமுதாயத்தில் எவரும் கடுகளவும் இவர்களை நம்பி காலத்தை வீணடிக்க மாட்டார்கள்

பாபர் மஸ்ஜித் இடிப்பு கரசேவை வன்முறைக்கு ஆதரவு தெரிவித்த ADMK கட்சிக்கும் டிசம்பர் 6 முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித்  போராட்ட தினத்தை முஸ்லிம்கள் கைது செய்யப்படும் நாளாகவே  மாற்றியமைத்த DMK கட்சிக்கும் இவ்விசயத்தில் என்ன வேறுபாடு என்பதையும் சற்று சிந்தித்தால் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயம் எந்தளவுக்கு கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அறிய முடியும்

போராட்டம் ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயக ரீதியில் எதற்கு பலன் தரவில்லை என்பதை அனுபவ ரீதியாக பல வருடம் பாடம் பெற்றோமோ அதற்கு மீண்டும் மீண்டும் அதே வழியை தேர்வு செய்வது முஸ்லிம் சமுதாயத்தின் தியாகத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் ஒன்றாகவே கருத வேண்டும்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட  இடமும் நமக்கு சொந்தம் இல்லை
இவ்விசயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் குற்றவாளிகள் இல்லை என்று அநீதமான முறையில் தீர்ப்பு வந்த பிறகும் நியாயத்தை கேட்டு போராடுவோம் என்றால் யாரிடத்தில் நியாயத்தை கேட்பது   ? என்ற சாதாரண பொது அறிவும் கூட இல்லாமல் சமுதாய தலைவர்கள்  இருப்பது நகைப்பான விசயம்

பாபர் மஸ்ஜிதை எவ்வாறு மீட்டுவது என்பதை சிந்திப்பதை விட பாபர் மஸ்ஜிதை துணிவோடு  இடிப்பதற்கும் தீர்ப்பை தனக்கு சாதகமாக பெறுவதற்கும் எதிரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எது காரணமாக இருந்தது என்பதை சிந்தித்து அந்த வழியை நாம் தேர்வு செய்வது தான் இதற்கு மாற்று வழியாகும்

1984 ஆண்டு பலவீனமாக இருந்த பீஜேபி கட்சி இன்று நாட்டை ஆளும் தனிகட்சியாக அதிகாரத்தை பெற்றுள்ளது என்றால் அந்த அதிகாரம் தான் அவர்களுக்கு இந்த வலிமையை தந்தது அதே வலிமையை  நாமும் வீரியத்தோடு அடைய பாடுபடுவது  தான் சிறந்த முயற்சியாகும்

அந்த முயற்சியின் சிந்தனை முஸ்லிம் சமுதாயத்திற்கு வந்து விட கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் தந்திரமாக செயல்படுவதை இன்னும் முஸ்லிம் சமுதாயம் ஏனோ புரியவில்லை

எந்த கட்சியோ ஆட்சியில் வருவதற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களை எழுபது வருட காலம் சிதற வைத்த பெறுமை முஸ்லிம் இயக்கம் கட்சிகளுக்கே சாரும்

தேர்தல் களத்தில் வேட்பாளராக நிற்கும் முஸ்லிமுக்கு ஓட்டு போடாதே என்று முஸ்லிம்களின் எதிரிகள் எவரும் அறிக்கை கொடுத்தது இல்லை

ஆனால் ஒரு முஸ்லிம் வேட்பாளரை சுட்டி காட்டி இவருக்கு  ஓட்டு போடாதே மாறாக  அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று மேடை தோறும் எதிர்ப்பு பிரச்சாரம் செய்த பெறுமை இஸ்லாமிய அமைப்புகளுக்கு தான் உண்டு

அரசாங்கத்தாலும்  எதிரிகளாலும் பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் தலைவர்களும் ஒரே கோணத்தில் பயணிக்க முடியும் என்பதை பல முறை நிரூபித்து காட்டிய இஸ்லாமிய இயக்கம் மற்றும் தலைவர்களுக்கு

தேர்தல் நேரத்தில் மாத்திரம் இணைய முடியாமல் இணைய முயற்சிக்காமல் இருப்பது ஏன்  ?

சமுதாய முன்னேற்றத்திற்கு தான் நாங்கள் இயக்கங்களை கட்சிகளை உருவாக்கினோம் என்ற இவர்களின் கூற்று உண்மை என்றால்  அதே முன்னேற்றத்தை மையமாக வைத்து  தேர்தல் நேரத்தில் ஏன் இவர்களால் இணைய முடியவில்லை   ?

முஸ்லிம் சமுதாயம் அதற்கு தடையாக உள்ளார்களா ?அல்லது இயக்க தலைவர்கள் அதை விரும்பாதவர்களாக உள்ளார்களா   ?

சமுதாயத்தை வைத்து தான் அரசியல் ரீதியாக இயக்கங்கள் வளர்ச்சி அடைந்ததே தவிர இயக்கங்களை வைத்து சமுதாயம் அரசியல் ரீதியாக வளர்ச்சியடைய போவது இல்லை என்ற நன்றியுணர்வு சமுதாய தலைவர்களுக்கு வேண்டும்

மார்க்கத்தில் அனைவரும் ஒரே கொள்கை அடிப்படையில்  இணைவது சாத்தியம் இல்லை என்பதை இஸ்லாமே சொல்கிறது

அதே நேரம் உலக விவகாரங்களில் சமுதாயம் வேறுபடுவது முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்கு தடை என்பதையும் எதிரிகளின் வெற்றிக்கு அதுவே மூல பலம் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவாக சொல்கிறது

விமர்சனங்களை செய்தே வாழ்நாளை வீணாக்காது விமோசனங்களை சிந்தித்து உலக விவகாரங்களில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும்  இணைந்திருப்பதும் தான் தற்போதைய  தேவை 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்
(இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

       (அல்குர்ஆன் : 3:200)

      நட்புடன்  . J இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்