அரசியலில் முஸ்லிம்கள்
லிப்ரஹான் கமிட்டி ஆய்வு
குப்பைக்கு போனது
*******
01-10-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1377
====================
பாபர் மஸ்ஜிதை 1992 ஆண்டு மதவெறியர்கள் இடித்ததை விசாரிக்க லிப்ரஹான் தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது
எட்டு கோடி ரூபாய் செலவில் அதற்கான முழு ஆதாரங்களை ஒன்று திரட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பதற்கு மூலமாக செயல் பட்ட குற்றவாளிகள் என்று 49 ( சங்பரிவார) குற்றவாளிகளை லிப்ரஹான் கமிட்டி தனது விசாரணை மூலம் பல ஆடியோ வீடியோ சான்றுகளுடன் சமர்பித்தனர்
அதை மையமாக வைத்தே பல வழக்குகள் நடைபெற்று வந்தது
தற்போது லிப்ரஹான் கமிட்டி முன் வைத்த எந்த சான்றுகளும் இவர்களே பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று லக்னோ CBI சிறப்பு நீதிமன்றம் வழக்கம் போல் இழுபறியில் கிடந்த வழக்கை கட்டப்பஞ்சாயத் செய்து முடிப்பது போல் நாடகமாடி நிறைவேற்றி விட்டது
லிப்ரஹான் கமிட்டி எட்டு கோடி ரூபாய் செலவழித்து சமர்பித்த சான்றுகள் எதுவும் தெளிவாக இல்லை என்பதை கூறுவதற்கு தான் 28 ஆண்டுகளையும் எட்டு கோடிகளையும் நீதிமன்றம் வீணாக்கியுள்ளது
இதன் மூலம் பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்தை நாடினால் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையை நீதிமன்றம் ஏற்படுத்தி விட்டது
லிப்ரஹான் கமிட்டி அறிக்கைகளை கசக்கி குப்பை கிடங்கில் வீசி விட்டது
இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் விரும்பினால் ஆர்ப்பாட்டம் போராட்டம் இவ்விசயத்திற்கு பயன்தராது என்பதை இனியும் புரியாது போனால் முஸ்லிம் சமுதாயத்தை விட மூட சமூகம் வேறு இருக்க முடியாது
மாறாக சட்டம் வகுக்கும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்கள் அதிகாரம் படைத்தவர்களாக நுழைய வேண்டும்
இந்த கட்சிக்கு பின்னால் சென்றால் நம் சமூகத்திற்கு குரல் கொடுப்பார்கள்
அந்த கட்சி தலைவருக்கு பின்னால் சென்றால் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுப்பார் என்ற குருட்டு நம்பிக்கையை துதிபாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
முடவனாக இருக்கும் ஒருவனும் கம்பால் செய்யப்பட்ட துணைகால்களை கூட சொந்த கால்களாக பயன்படுத்தினால் தான் ஓரளவு அவனால் நடக்க இயலுமே தவிர
பிறர் வைத்துள்ள கம்பை பிடித்து கொண்டு நடக்க நாடினால் அதுவும் சரியான ஊன்றுகோலாக அமையாது
முஸ்லிம்களை மூலமாக வைத்து இயக்கங்களை கட்சிகளை வளர்த்தி கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் தேர்தல் நேரத்தில் தனித்தனியாக சீட்டுக்களை கேட்டு அலையாது
அனைவரும் ஒன்றிணைந்து எந்த கட்சி முஸ்லிம் சமூகத்திற்கு அதிகப்படியான சீட்டுகளை தர சம்மதிக்கிறார்களோ அவர்களை மட்டுமே கூட்டாக ஆதரிக்க முடிவு செய்ய வேண்டும்
ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அந்த வேட்பாளருக்கே அனைத்து இஸ்லாமிய கட்சி தலைவர்களும் தங்கள் மக்களிடம் ஓட்டு செலுத்துமாறு வலியுருத்தி கூற வேண்டும்
இனியும் கட்சிகளுக்கு பின்னால் பக்தி கொண்டு சுற்றினால் அவர்கள் மீண்டும் மீண்டும் நம் சமுதாயத்தை ஒடுக்கவே முற்படுவார்கள் என்பதை உணர வேண்டும்
காரணம் ஒட்டுக்காக யாரோடும் கூட்டு வைத்து அதற்காக எதையும் செய்யும் எண்ணம் உடையவர்களே அரசியல்வாதிகள்
மறப்போம் மன்னிப்போம் என்ற வசனமே அரசியல்வாதிகள் தங்கள் கள்ளத்தனமான உறவுக்கும் கட்சி தாவுவதற்கும் உருவாக்கிய வாசகம் தான்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment