மரணத்தை மறப்பதே மடமை
காலை சிந்தனை பாகம் ஆறு
மரணத்தை மறப்பதே முதல்
மடமை
============
03-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
===============
நாளை நடக்கவிருப்பதை மனிதன் அறியும் ஆற்றலை பெறாவிட்டாலும் நாளை என்ன நடக்க வேண்டும் என்று முற்கூட்டியே திட்டமிடுபவன் மனிதன்
அதே திட்டத்துடன் அன்றைய இரவு இழைப்பாற கண் மூடும் மனிதன் அந்த கண்களை ஒரேடியாக மூடினால் அது தான் மரணம்
எவ்வித சலனமும் இல்லாமல் மனிதனை தாவிக் கொள்வது மரணம் மட்டுமே
கட்டில் மெத்தைகளில் மனைவியோடு குழந்தைகளோடு உறவுகளோடு இணைந்து உறங்கும் மனிதனின் உயிர் பிரிந்து போனால் அவனது உறவுகளும் அவனை அடக்கம் செய்யும் புதைகுழியில் ஒரு நொடி கூட துணையாக தங்குவதற்கு இசைய மாட்டார்கள்
அத்தகைய மரண சிந்தனை தான் மனித சமுதாயத்திடம் காணப்படும் சிந்தனைகளில் மிகவும் குறைந்த சிந்தனை
அந்த குறைந்த சிந்தனை தான் ஒரு மனிதனின் வாழ்கையை திசை மாற்றுகிறது
அவனது மறுமை வாழ்கையை நாசமாக்குகிறது
தனது உடலில் உயிர் எந்த வடிவத்தில் எந்த நேரத்தில் நுழைந்தது என்பதையும் எந்த வடிவத்தில் அந்த உயிர் பிரிகிறது என்பதையும் அறவே அறியாத மனிதன் தான்
உலகத்தின் அர்ப்பமான வாழ்வில் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் பொழுதை கழிக்கின்றான்
இதுவே மனிதன் செய்யும் மடமைகளில் முதல் மடமை
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ
அவன் (இறைவன் ) தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்
அன்றியும் உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள்
அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை
(அல்குர்ஆன் : 6:61)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment