கொரோனா தாக்கமும் பகுத்தறிவு சேதமும்
கொரோனா தாக்கமும்
பகுத்தறிவு சேதமும்
*******
04-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1346
====================
இந்தியாவில் கொரோனா தொற்று துவங்கிய நேரத்தில் கடுமையான பல சட்டங்களை போட்டு நாட்டு மக்களின் பல சிரமங்களுக்கு வித்திட்ட அரசாங்கம்
அதே கொரோனா தொற்று அரசின் அறிக்கை பிரகாரமே இந்தியாவில் லட்ச கணக்கில் தாக்கப்பட்ட நிலையிலும் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையிலும் ஊரடங்கு தளர்வுக்கு WHO அமைப்பே கண்டனம் தெரிவித்த நிலையிலும் இது வரை நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியது ஏன் ?
கொரோனா எனும் தொற்றுக்கு முன்னால் அரசு தோற்றுவிட்டது என்று இதை எடுத்து கொள்வதா
அல்லது கொரோனா அரசின் நடவடிக்கையை கண்டு புறமுதுகு காட்டி ஓடிவிட்டது என்று எடுத்து கொள்வதா ?
கடுமையான கடல் சீற்றம் ஏற்பட இருப்பதால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று ஒரு அரசு சொல்லி விட்டு
பலமாக கடல் கொந்தளிக்கும் வேளையில் மீனவர்கள் தற்போது கடலில் மீன் பிடிக்க செல்லலாம் என்று அனுமதி தந்தால் அது அறிவார்த்த அரசாங்கமா ?
இது போல் தான் தற்போது ஊரடங்கு நீக்கம் வெளிப்படுகிறது ?
பகுத்தறிவுக்கு முரண்பட்ட ஒரு நடவடிக்கையை பகுத்தறிவாக அறிவியலாக கருதும் அளவு அரசியல்வாதிகளின் பகுத்தறிவு சேதமடைந்துவிட்டது
மக்களின் இயலாமை எதையும் தாங்கும் இதயமாக மாறி விட்டது
இதில் ஒரு மடங்கு மேலாக கொரோனாவை அழிப்பதில் அரபு நாடுகளின் மார்க்க நடவடிக்கை நகைப்புடன் ஆச்சரியம் தருகிறது
கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்டு விட்டு தான் சமூகவிலகல் தொழுகையை ஜமாத் தொழுகையாக மாற்ற முடியும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்
பல நெடுங்காலமாக ஆயிரக்கணக்கில் தவாப் செய்யும் அற்புத இடமாக திகழ்ந்த காஃபா ( புனித இல்லம் ) தற்போது கிராமங்களில் தொழுகைக்கு ஆள் இல்லாது குறைவான நபர்கள் ஜமாத்தில் பங்கு கொள்ளும் இடம் போல் காஃபாவின் காட்சி மாறி விட்டது
கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது எனவே ஜமாத்தில் இணைந்து தொழுகுங்கள் என்று அரபுநாடுகளுக்கு இனி யார் வாக்குறுதி கொடுப்பார்கள் ?
அரபுநாடுகள் இவ்விசயத்தில் சரியான நிலைபாட்டை எடுக்கும் வரை இந்திய அரசும் உலக முஸ்லிம்களும் தற்போதைய நிலையை மாற்ற மாட்டார்கள் என்பது தான் பலரது செயல்பாடு புரிய வைக்கிறது
விரும்பியோ விரும்பாமலோ இவ்விசயத்தில் நாமும் இதற்கு அவர்களை போல் நிர்பந்தம் என்று பெயர் சூட்டிக் கொண்டு நிகழ்காலங்களை கடந்து போகும் சூழ்நிலை தான் நீடிக்கிறது
மார்க்க ஆதாரங்களை முன் வைத்து கொரோனாவை முடிவு செய்யாமல் கொரோனாவை காரணம் காட்டி ஈமானிய நம்பிக்கை இல்லாத ஆய்வாளர்கள் ஆட்சியாளர்கள் சொல்லும் செய்திகளை மையமாக வைத்து மார்க்க நிலைபாட்டை மாற்றியதின் விளைவே இது
இதே நிலை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கலாம்
பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது
இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால் (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 6:17)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment