மனிதரில் புனிதனா

          நீ  மனிதரில் புனிதனா
              அல்லது மனிதனா

     காலை சிந்தனை பாகம் ஆறு
      
                   ============
                      02-09-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
             ===============   
பொருளால் உடல் உழைப்பால் ஒருவன் தன்னை சார்ந்த ஒரு  மனிதனுக்கு உறவுக்கு மகிழ்வை ஏற்படுத்த இயலாது போனாலும்

மனதால் அல்லது தனது செயலால் ஒரு மனிதனுக்கு மகிழ்வை ஏற்பத்துவது தான் மனித தன்மையில் சிறந்த தன்மை

எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்கு மேல் ஒரு அதிகாரம் படைத்தவன் அல்லது உரிமை படைத்தவன் ஏதோ ஒரு வகையில் இருப்பான்

அதை புரிந்து அதற்கு ஏற்று நடந்து கொள்ள  கற்று கொள்ள வேண்டும்

மனதளவில் கூட தனக்கு  மகிழ்சியை ஏற்படுத்தும் தகுதி கூட இவரிடம்  இல்லை என்று ஒருவரை பற்றி உரிமையாளன் நினைத்தால் அது தான் மிகவும் துக்கமானது

இந்த ஜென்மதுக்கா நாம் பிறந்தோம்  ?
இந்த ஜென்மமமா நமக்கு பிறந்தது  ?
இந்த ஜென்மமா நம் கணவன்  ?
இந்த ஜென்மமா நம் மனைவி ?
இந்த ஜென்மமா நம் தாய்  ?
இந்த ஜென்மமா நம் மகள்  ?
இந்த ஜென்மமா நம் மாமியா  ?
இந்த ஜென்மமா நம் மருமகள்  ?
இந்த ஜென்மமா நம் மருமகன்  ?
இந்த ஜென்மமா நம் ஆசான்  ?
இந்த ஜென்மம நம் மாணவன்  ?
இந்த ஜென்மமா நம் முதலாளி  ?
இந்த ஜென்மமா நம் தொழிலாளி ?

என்று ஒருவன் மனதளவில் சலித்து கொண்டால் கூட அவன் எதிர் பார்க்கும் விதத்தில் நமது பேச்சு நமது செயல் இல்லை என்று தான் பொருள்

அதனால் தான் பிறரை மகிழ்வு படுத்தும் புன்னகையை கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்மம் என்று சொன்னார்கள்

இன்சொல் கூறும் அர்ப்பமான வாக்கியத்தை கூட தர்மம் என்று சொன்னார்கள் 

இந்த தர்மத்தை கூட செய்ய தகுதி இல்லாமல் வாழும் ஒருவன் மனிதனாக மட்டும் அல்ல மிருமகமாக கூட வாழ தகுதி இல்லாதவன்

மனிதரில் புனிதராக வாழ்வது தான் கஷ்டம்
ஆனால் மனிதன் மனிதனாக வாழ கற்று கொள்வது எவ்விதத்திலும் கஷ்டமான காரியம் அல்ல

      ***************************

1835
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும் இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்

ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும்
அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும்

இன்சொல்லும் தர்மமாகும்

ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும்

தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்

நூல்  : ஸஹீஹ் முஸ்லிம்

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்