வேடதாரிகள்
காலை சிந்தனை பாகம் ஜந்து
வேடதாரியா ஈமான்தாரியா
============
01-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
===============
கடந்த மாதங்களில் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட போது அதை நினைத்து வருந்தியவர்கள்
எப்போது பள்ளிவாசல் திறக்கப்படும் என்று ஏக்கப்பார்வையோடு பல அறிக்கை போட்டவர்கள்
பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டதை கண்டித்து பல ஆக்ரோசமான பதிவுகளை போட்டவர்கள்
தற்போது(01-09-2020) பள்ளிவாசல்கள் திறக்கப்பட்ட சூழலில் அவர்களின் அறிக்கைகள் உண்மையானது என்பதை தவறாது வெளிப்படுத்தி காட்டட்டும்
காரணம் அவர்களே ஒவ்வொரு பகுதியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றனர்
இப்போதும் வாரம் ஒரு முறை ( ஜும்மா நாளில்) பள்ளிவாசல் வருவதையே வழக்கமாக்கி கொண்டால் அவர்கள் கடந்த நாட்களில் போட்டிருந்த அறிக்கைகள் யாவும் போலியானது என்பதும் வேடதாரிகள் என்பதும் தெளிவாகி விடும்
இன்றைய பஜ்ரு ஜமாத்தில் அவர்கள் பங்கு கொண்டார்களா என்பதை அவர்களே தன்னை எடை போட்டு பார்க்கட்டும்
இல்லாத இயலாத நேரம் வருந்துவதை விட இயலும் நேரத்தில் ஒரு மனிதனின் செயல் எவ்வாறு உள்ளது என்பதை கண்காணித்து கூலி தருபவனே இறைவன்
மனிதனின் கண்களை ஏமாற்றலாம் ஆனால் படைத்த இறைவனின் கண்காணிப்பை ஏமாற்ற இயலாது
ஈமான்தாரிகளுக்கு தான் இறைவனிடம் மதிப்பு வேடதாரிகளுக்கு ஈமான்தாரிகளிடமும் கூட மதிப்பு இல்லை என்பதை உணரட்டும்
ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ
அவன்தான் அல்லாஹ்
உங்கள் இறைவன்
அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை
எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்
ஆகவே, அவனையே வழிபடுங்கள் இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்
(அல்குர்ஆன் : 6:102)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment