பாபர் மஸ்ஜிதும் முஸ்லிம் சமூகமும்
தனித்து விளங்கும் முஸ்லிம்
! சமுதாயம் !
( பாபர் மஸ்ஜித் )
*******
06-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1342
====================
நெடுங்காலமாக இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு அதன் பின் முஸ்லிம்களின் வீரத்தை பலவீனமாக்க பல ஆண்டுகள் முஸ்லிம் சமுதாயத்தை நீதிமன்றத்தையும் நம்ப வைத்து
அதன் பின் அரசியல் சாசனத்தை குப்பையில் வீசிவிட்டு அநீதமான தீர்ப்பையும் வழங்கி
இறுதியில் முஸ்லிம்களின் உணர்வுகளை கோபத்தை தூண்டும் விதமாக அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரே பங்கு கொண்டு முன்னின்று நடத்துவதை பூதாகரமாக விளம்பரம் செய்து
நடத்தப்பட்ட ஒரு அவமான சம்பவம் போல் சங்பரிவார கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்டிருந்தால் ஒட்டு மொத்த இந்தியாவையே இன்று இரத்தம் ஓடும் பூமியாக மாற்றி இருப்பார்கள்
அதை எதிர் பார்த்து தான் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை கூட சங்பரிவார கும்பல் நேரடி ஒளிபரப்பும் செய்தார்கள்
இவ்விசயத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பொறுமையும் சகிப்பு தன்மையும் மீண்டும் மீண்டும் சங்பரிவார கும்பலுக்கு செருப்படி தந்துள்ளது
பல ஆண்டுகள் ராமரை வைத்து அப்பாவிகளை ஏமாற்றி மதவெறியை தூண்டியே ஆட்சிக்கு வந்தவர்கள் இனியும் இதை வைத்து பூச்சாண்டி காட்ட நினைத்தால் நிச்சயம் அவர்கள் தான் இழிவை சந்திப்பார்கள்
நீதி கிடைக்கவில்லை என்பதற்காக தவறான வழியை தேர்வும் செய்யும் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் மூட சமுதாயமும் இல்லை
விரக்தியில் தூக்கு போட்டு சாவை எதிர் நோக்கும் கோழை சமுதாயமும் இல்லை
இறையில்லத்திற்கு சொந்தக்காரன் இறைவனே இவ்விசயத்தில் அமைதி காக்கும் போது அந்த இறைவனின் தீர்ப்புக்கு காத்திருப்பதில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் மகிழ்சி தான்
هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيَهُمُ اللّٰهُ فِىْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الْاَمْرُ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா?
(மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்) கொண்டுவரப்படும்
(அல்குர்ஆன் : 2:210)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment