ராமர் செய்த நன்மை

      இராமர் முஸ்லிம் சமூகத்திற்கு
                 செய்த நன்மை

                          *******
                     05-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1341.
           ====================
இராமருக்கு கட்டப்பட்ட கோயிலை இடித்து விட்டு தான் பாபர் மஸ்ஜித்  கட்டப்பட்டது என்று சங்கபரிவார ககூட்டம்  மட்டுமே சில ஆண்டுகளாக பொய்யை மெய் முலாம் பூசி  கூறி வந்தது

உலகில்  எவருமே  இதை கூறவில்லை

ஆனால் பாபர் மஸ்ஜிதை இடி.த்து விட்டு தான் இராமருக்கு கோயிலை கட்டினார்கள் என்று தான்  இனி உலகமே பேசும்

அதுவும் உலகம் அழியும் வரை பேசும்

பாபர் மஸ்ஜித் பள்ளியின் டூமை  இடித்த பல்பீர் சிங் அந்த பாவத்திற்கு பரிகாரமாக 27 ஆண்டுகளில் தொண்ணூரு பள்ளிவாசல்களை  கட்டுவதற்கு காரணமாக இருந்தான் என்று இப்போது உலகமே பேசுகிறது

இடிக்கப்பட்ட பாபர்  பள்ளிவாசலின் இடத்தில் தான் இன்று இராமர் கோவில் கட்டுவதற்கு அநியாயமாக அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது என்று இனி உலகமே பேசும்

அதுவும் உலகம் உள்ள வரை பேசும்

பாபர் பள்ளியை இடித்து விட்டு இராமருக்கு கோவில் கட்டுவதை இராமரை வணங்கும் சமூகமும் கூட இன்று கவலையாக பார்க்கிறது

பாபர் மஸ்ஜிதை இடித்து விட்டு அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டுவதை கூட சகித்து கொண்டார்கள் என்று முஸ்லிம் சமூகத்தின் பொறுமையை இனி உலகமே போற்றும்

அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடத்தில் இராமர் பிறந்தாரா என்பதற்கு சான்றை தான் இதுவரை  முஸ்லிம்கள் கேட்டார்கள்

இராமனின் பூர்வீகமே இந்து நாடாகிய நேபாளம் தான் என்று நேபாள பிரதமரே வாக்குமூலம் கொடுத்து சங்பரிவார பொய்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டார்

ஒரு வகையில் இராமர் எனும் கதாபாத்திரம் முஸ்லிம் சமூகத்திற்கு தான் அதிகமான  நன்மைகளை செய்துள்ளது

ஆனால் அதே இராமர் எனும் கதாபாத்திரம் சங்பரிவார கூட்டத்திற்கு  அவமானத்தை தான் பல விதங்களில் தேடி தந்து விட்டது

இப்போது சிந்தியுங்கள்
இராமர் எனும் கதாபாத்திரம்  முஸ்லிம் சமூகத்திற்கு பல விதங்களில் நன்மையை  செய்துள்ளதா அல்லது தீங்கை செய்துள்ளதா   ?

பாபர் மஸ்ஜிதை இடித்த பல்பீர் சிங் இஸ்லாத்தை தழுவினான் ஆனால்
பல்பீர் சிங்கை பகடை காயாக பயன்படுத்திய சங்பரிவார கூட்டமோ இறை கோபத்தை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் சாபத்தையும் இழுத்து போர்த்தி கொண்டனர்

இனி வரும் குறுகிய நாட்களில் இறைவன் எதிர்பாராத பல நிகழ்வை நடத்தி காட்டுவான் என்றே என் மனம் அடிக்கடி  சொல்லி கொண்டுள்ளது

காலமே இதற்கு தெளிவை தரும்

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌  وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு  நிராகரிப்பவர்களுக்கு  நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்

(தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு

          (அல்குர்ஆன் : 3:178)


        நட்புடன்  ஜே . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்