பாபர் மஸ்ஜித் ராமர் கோயில்
பாபர் மஸ்ஜித்
[][][][][][][][][]
04-08-2020
J . Yaseen iMthadhi
********
கட்டுரை எண் 1340
Bismillahir Rahmanir Raheem
************
27 வருடமாக ஜனநாயக ரீதியில் பல விதமான தியாகங்களை செய்து பல உடமைகளை உயிர்களை இழந்து முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் வழக்கில் நியாயம் எதிர் பார்த்து காத்திருந்தது நீதிமன்றத்தின் மீது முஸ்லிம்ளுக்கு இருந்த நம்பிக்கையில் தான்
எப்போது நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றமே முகலாய மன்னர் பாபர் ராமருக்கு கட்டப்பட்ட கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டினார் என்பதற்கு ஆதாரமே இல்லை என்று தீர்ப்பில் ஒப்புதல் வாக்குமூலத்தை பட்டவர்த்தமாக அறிவித்து கொண்டே பாபர் மஸ்ஜித் இருந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது இல்லை என்று அநீதமாக தீர்ப்பு வழங்கினார்களோ
அப்போதே முஸ்லிம்கள் இந்திய நீதிமன்றத்தின் மீது இவ்விசயத்தில் நம்பிக்கை இழந்து படைத்த இறைவனிடமே பாபர் மஸ்ஜித் விவகாரத்தை அதன் பொறுப்பை முழுமையாக ஒப்படைத்து விட்டார்கள்
இந்நிலையில் அநீதமாக தீர்ப்பு வழங்கப்பட்ட இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு மதசார்பற்ற இந்திய நாட்டின் பிரதமர் நேரடியாக கலந்து கொள்ளவிருப்பதை பிரமாண்டமாக விளம்பரம் செய்து வெளியாகும் அறிக்கைகளை கண்டு முஸ்லிம்கள் ஒரு போதும் உணர்ச்சி வசப்பட போவது இல்லை
பாபர் மன்னன் ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பெயரில் பள்ளியை கட்டினான் என்று பல ஆண்டுகள் ராமர் பெயரை சொல்லியே அரசியல் நடத்திய மதவாத கட்சிக்கு இனி இது போல் ஒரு வாய்ப்பு ஒரு போதும் அமைய போவது இல்லை
காரணம் முஸ்லிம்கள் இவ்விசயத்தில் அதிகமாகவே பொறுமையை கடைபிடித்து விட்டார்கள்
இனி ராமருக்கு கோவில் கட்டுவதின் மூலம் அதை வைத்தே பூச்சாண்டி காட்டி அரசியல் செய்யலாம் என்று மதவாத கட்சி நினைத்தால் அதிலும் இழிவை தான் நிச்சயம் சந்திப்பார்கள்
இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நபருக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் பங்களிப்பு செய்தால் கூட ரூ 28 கோடியில் பாபர் பெயரில் பிரமாண்டமான ஒரு மஸ்ஜிதை போட்டிக்காக கட்ட இயலும்
மதவெறியர்களால் இடிக்கப்பட்ட
பாபர் கட்டிய பள்ளியின் இடத்தில் மீண்டும் பள்ளிவாசலை கட்டி தொழுதால் தான் இறைவன் தொழுகையை எற்பான் என்றில்லை
அல்லாஹ் அபகரிக்கப்பட்ட அந்த இடத்தில் தான் பிறந்தான் என்ற மூடநம்பிக்கையும் இஸ்லாத்தில் இல்லை
நியாயம் முஸ்லிம்கள் பக்கம் என்பதை நிரூபிக்க தான் பல வருடம் போராடினார்களே தவிர அந்த இடத்தை தவற விட்டால் வேறு எந்த இடமும் கடவுளை வணங்க உவந்த இடம் இல்லை என்பதற்காக அல்ல
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
என்ற பழமொழியை உருவாக்கிய மனிதனுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையை விட ஆயிரம் மடங்கு இறைவன் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ள சமுதாயமே
முஸ்லிம் சமுதாயம் என்பதை காலம் உணர வைக்கும்
وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்
(அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல் வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்
இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம்
பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது
அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்
(அல்குர்ஆன் : 6:108)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment