அமித்ஷா கொரோனா
அமித்ஷா கொரோனாவும்
விமர்சனமும்
*******
02-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1339
====================
உலகில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அதன் மூலம் சில லட்சம் மனிதர்கள் உயிர் இழந்த போது
அதற்காக வருத்தப்பட்ட மக்கள் பிராத்தணை செய்த மக்கள் இன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தாக்கியது என்ற தகவலை பார்த்த உடன் ஆனந்த மகிழ்சி அடைவது போல் தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் எந்தளவுக்கு நாட்டு மக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வெறுப்புடன் உள்ளார்கள் என்பதை அவரும் அவர் சார்ந்த கட்சியும் தற்போது யோசிக்க வேண்டும்
அதே நேரம் ஒருவருக்கு நோய் ஏற்படும் போது பாதிப்பு ஏற்படும் போது அதை பார்த்து மகிழ்வை வெளிப்படுத்துவது உண்மையான முஸ்லிம்களின் பண்பாக நிச்சயம் இருக்க முடியாது
அது போன்ற தவறான முன்னுதாரணம் நபிகளாரின் வரலாற்றில் இஸ்லாத்தில் அறவே இல்லை
சோதனை தாக்கினாலே அவர்கள் தீயவர்கள் என்று பொதுவாக முடிவு செய்ய கூடாது
காரணம் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வயது முதிர்ந்தோர்கள் குழந்தைகள் நல்லோர்கள் கொரோனாவை விரட்ட உழைத்த மருத்துவர்கள் சேவையாளர்கள் ஏராளம் உள்ளனர்
ஒரு வகையில் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நினைத்து மனிதன் என்ற முறையில் வருந்ததான் வேண்டும்
காரணம் அமித்ஷாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவரை சுற்றியிருப்போருக்கும் பரவ நேரிடும்
கொரோனா மூலம் இறைவன் நாட்டத்தின் பிரகாரம் அமித்ஷாவுக்கு சில வேளை எந்த விளைவு ஏற்பட்டாலும் அந்த நிகழ்வின் மூலமும் முஸ்லிம் சமுதாயம் வழக்கம் போல் பலிகடாவாக்கப்படுவார்கள்
சமுதாய எதிரிகளின் அழிவை விரும்புவதை விட அவர்களின் மனமாற்றத்தை எதிர்பார்ப்பதும் அதற்காக பிராத்திப்பதும் தான் நம் கடமை என்பதை மார்க்க நெறியை மீறி விமர்சிக்கும் முஸ்லிம்கள் இனியாவது உணருவார்களா ?
இஸ்லாமிய வரலாற்றில் பிர்அவ்ன் காரூன் அபூஜஹ்ல் உத்பா ஷைபா போன்ற அரக்கர்களின் தகுதியை இன்னும் அமித்ஷா பெறவில்லை என்பது தான் நிஜம்
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
ஆகவே நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்
ஆனால் அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர் எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்
அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்
(அல்குர்ஆன் : 2:137 )
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment