சங்கிகள்

       சங்கி வைரஸ்களே விபரீத
                    வைரஸ்கள்
                   [][][][][][][][][][][][][]
                      02 -04-2020
              J . Yaseen iMthadhi
                       ************

தொற்று நோய் எப்படி வந்தது

யாரால் வந்தது

எந்த சமுதாயத்தால் வந்தது

என்று ஆராய்சி செய்வதால் எந்த ஒரு நன்மையும் பலனும் எவருக்கும் ஏற்பட போவது இல்லை

தொற்று நோயை முஸ்லிம்கள் பரப்புகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு  தொற்று நோய் என்பது  அரசியல்வாதிகள் மீது  தூக்கி  வீசப்படும் மாட்டுச் சானியோ கிழிந்த இத்துப்போன  செருப்புகளோ  அல்ல

நினைத்தவர்கள் மீது தொற்று நோயை பரப்பும் வல்லமை மனிதனுக்கு இருந்தால் இவ்வுலகில் அந்த தொற்று நோயால் முதலில் பலியாகி இருக்க  வேண்டியவர்கள்  அரக்கர்களும் சர்வாதிகார  அதிபர்களும் மதவெறி பிடித்து அலையும் மனித மிருகங்களும் தான்

ஒரு மனிதன் அவன் நேசிக்கும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சமுதாயத்திற்கும்  தொற்று நோயை நுழைத்து
அதன் மூலம் எதிரிகளை அயோக்கியர்களை நோயாளிகளாக  மாற்ற திட்டம் போடவும் மாட்டான் அவ்வாறு திட்டம் போடுபவனை மூளை உள்ள ஒரு மனிதனாக நிச்சயம் அவன்  ஏற்கவும் மாட்டான்

இதை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களாக சங்கிகள் இருப்பது அவர்களின் மடமைக்கும் மனிதநேயமின்மைக்கும் சரியான சான்று

பாதிக்கப்பட்டவனை மனிதனாக பார்க்க கடமைபட்டவர்கள் அந்த மனிதனை கூட விஷ  கிருமியாக சித்தரிக்க முயல்கிறான் என்றால் அவனே கொரானா வைரசை விட பல மடங்கு ஆபத்தானவன்

நம் இந்திய திரு  நாட்டில் இருந்து முதலில் அடித்து விரட்ட வேண்டியது கொரானா வைரசை அல்ல

மாறாக அந்த கொரானாவை வைத்தே அரசியல் செய்யும் ஈனத்தனமான  அரசியல்வாதிகள் மற்றும்  ஊடகங்கள் மதவெறியர்கள் எனும்  வைரஸ்கள் தான்

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்