கொரானா சுத்தம்

           கொரானா சுத்தமா
            வாழ்கையே சுத்தமா

               [][][][][][][][][][][][][][][]

     15-03-2020 கட்டுரை எண் 1323
               J . Yaseen iMthadhi
                      ***********
கொரானா வைரஸ்  தாக்காமல் இருப்பதற்கு வலியுருத்தப்படும் எல்லா சுத்தங்களும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில்  எப்போதும் கடை பிடிக்க வேண்டிய வழிமுறை தானே தவிர கொரானாவுக்கு மாத்திரம் விஷேசமாக கடை பிடிக்க வேண்டிய வழிமுறை அல்ல

உடையும் உடலும் இடமும் சூழலும் எப்போதும் சுத்தமாக வைத்து கொள்வது தான் மனிதனின் ஆரோக்ய வாழ்வுக்கு உவந்த செயலாகும்

இவைகளை கடைபிடிக்காமல் வெளியுலகில் வலம் வரும் போது மாத்திரம் நறுமணங்களை  அத்தர்களை பூசிக்கொண்டு ஆடைகளில் மாத்திரம் பேஷனை பேணி கொண்டு முகத்தில் கால் கிலோ பவுடரை பூசிக்கொண்டு மினுமினுப்போடு  திரிவது தான் தற்போதைய உலகத்தின் போலியான நாகரீகம்

இன்றைய உச்சகட்டமான விஞ்ஞான காலத்திலும் சிறுநீர் இருந்தால் கழுவி சுத்தம் செய்யாமல் இருக்கும் அறிவீனர்கள் நிறைந்த காலத்தில் தான் நாம்  வாழ்கிறோம்

கட்டண கழிவறைகளில் சுத்தம் செய்வதற்கு  நீர் வைத்திருந்தும் கழுக வேண்டிய பகுதிகளை கழுவாமல் கழிவுகளை வெளியேற்றிய பின் கால்களை கழுவி கொண்டு வெளியேறும் மூடத்தனமான சமுதாயமாக உள்ளனர்

சுத்தம் சோறு போடும் என்று வெற்று தத்துவம் பேசுவோருக்கு சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ தெருக்களை நாசமாக்கும் குப்பைகளை பெருக்கும் வேலைகளை செய்யும் ஏழைகளுக்கும்
கழிவறைகளை தூய்மை செய்யும் கூலி தொழிலாளிக்கும்  தான் சுத்தம் உண்மையில் சோறு போடுகிறது

இஸ்லாமிய சட்டங்களில் சுத்தம் என்பது அனைத்து விதமான ஆன்மீக வணக்கத்திற்கும் மாத்திரம்  உரித்தானது அல்ல

மாறாக மனிதனின் வாழ்கை முறைக்கே மூலதனமானது

இறைநம்பிக்கையில் கூட சுத்தமான கடவுள் கொள்கை தான் மனிதனை சமமாக நல்லவனாக வாழ செய்யும்

وَالرُّجْزَ فَاهْجُرْۙ‏ 

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக

           (அல்குர்ஆன் : 74:5)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்