கொரோனாவும் அரபுநாடுகளும்

               கொரோனாவை
        மலகுல் மவ்த் ஆக்கிய
                 அரபு நாடுகள்

              [][][][][][][][][][][][][][][]

     13-03-2020 கட்டுரை எண் 1322
               J . Yaseen iMthadhi
                      ***********
ஈமானுக்கும் உளவியல் பலத்திற்கும் வீரத்திற்கும் கடந்த பல நூற்றாண்டுகளாக  எடுத்து காட்டாக விளங்கி வந்த முஸ்லிம் அரபு நாடுகள்

தற்போது முஸ்லிம் அல்லாத  நாடுகளை விட இறைநம்பிக்கையில் மனஉறுதியில்  தடுமாற்றம் அடைந்து விட்டனரோ என்ற ஐய்யத்தை தான்  கொரோனா எனும் தொற்று நோய் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது

தொற்று நோய் நுழைந்து விட்ட  பகுதியில் இருக்கும் நோயாளிகள் தொற்று நோய் இல்லாத பகுதிகளுக்கு செல்வதையும்
தொற்று நோய் தாக்காத  பகுதியில் வாழும் மக்கள் தொற்று நோய் தாக்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பதும் தான் நபிகள் (ஸல்) அவர்களின் வழிமுறை இதற்கு சான்றாக பல ஆதாரங்கள் ஹதீஸ் நூற்களில் உள்ளது

இந்த ஹதீஸ்களின்  எதார்தத்தை உணராமல் ஏனைய நாடுகள் எப்படி அவர்களின்  உயிரை இறைநம்பிக்கையை விட மேலாக கருதுகிறார்களோ அதே போன்ற மனோபாவத்திற்கு அரபு நாடுகளும்  தள்ளப்பட்டு வருகிறது

உம்ரா போன்ற உயரிய வணக்கத்தை நிறைவேற்ற வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் தொற்று நோய் தாக்காத  மக்களை கூட தற்போது அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருப்பதும்

புனித பூமியை தாயகமாக கொண்ட தொற்று நோய் தாக்காத  மக்கள்  கூட ஐந்து நேர  ஜமாத் தொழுகைக்கு பள்ளிவாசல்களுக்கு  வந்தாலே கொரோனா வைரஸ் தாக்கி இறந்து விடுவார்கள்  என்ற உளவியல்  அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதும்

ஒரு வார காலம் பள்ளிவாசல்களில் ஜமாத் தொழுகையே நடக்காது என்று குவைத் நாடு அறிவிப்பு செய்திருப்பதும்

இப்படி பல நடவடிக்கைகள் அரபு நாடுகளின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது

ஜும்மா தொழுகை பிரசங்கம் போன்றவை கூட பத்து நிமிடத்திற்கு மேல் நடத்த கூடாது என்று சட்டத்தை  திணித்திருப்பது மார்க்க  அறிவீனமான செயலாகும்

பத்து நிமிடம் தாண்டினால் கொரோனா வைரஸ் தாக்க கூடும் என்றால் ஏன் அந்த பத்து நிமிடத்தில் கொரோனா தொற்று நோய் ஜமாத்தில் பங்கு பெற்ற நபர்களை  தாக்கும் வாய்ப்பு இருக்காதா   ?

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்றால் அந்த  காற்று ஜமாத் நேரத்தில் மட்டும் தான் வேலை செய்யுமா  ?

ஏன் வீதிகளில் இல்லங்களில் தொற்று நோய் வைரஸ் காற்று பரவாதோ

கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவிலேயே கொரோனா தாக்கம் குறைந்து விட்ட சூழலில்

கொரோனா வைரசை எதிர் கொள்ளும் மருத்துவத்தில் தீவிரமாக அக்கரை செலுத்த வேண்டிய அரபு நாடுகள் கொரோனா வைரசை மலகுல் மவ்தாக சித்தரிப்பது வேதனைக்குரிய விசயமாகும்

இது போன்ற சூழ்நிலையில் மனதைரியத்தையும் நோய்களை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற அறவுரைகளையும் தொற்று நோயால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் மார்க்க ரீதியில் கற்று தர வேண்டிய அரபு நாடுகள் அனைவரையும் கொரோனாவை அஞ்சும் கோழைகளாக ஆக்கி வருவது கண்டிக்கப்பட வேண்டிய காரியமாகும்

கொரோனா என்ற பெயர் தான் உலகிற்கு புதுமையே தவிர தொற்று நோய் என்பது புதிதல்ல

இதற்கு முன் தோன்றிய பல தொற்று நோய்களை உலக மக்கள் சந்தித்துள்ளார்கள் எதிர் கொண்டுள்ளார்கள் விரட்டியும் உள்ளார்கள் தற்போது உலகில் அவைகளை மருத்துவ சாதனை மூலம் இல்லாமலும் ஆக்கியுள்ளார்கள்

இறைவனின் நாட்டம் ஒரு மனிதனை தொற்று நோய் தாக்கும் என்று இருந்தால் அந்த மனிதன் உயர்ரகமான மருத்துவத்தில் பாதுகாப்பில்  இயற்கை சூழலில்  இருந்தாலும் அந்த மனிதனை தாக்கும்

இறைவனின் நாட்டம் ஒரு மனிதனை தொற்று நோய் தாக்க கூடாது என்று இருந்தால் அந்த மனிதன் தொற்று நோய் தாக்கிய  பல ஆயிரம் நபர்களுக்கு இடையில் இருந்தாலும் அந்த மனிதனை தொற்று நோய் தாக்காது

இது தான் ஈமான் கொண்ட இறை நம்பிக்கையாளனின் உறுதியான நம்பிக்கையாக இருக்க வேண்டும்

பார்க்கும் நபர்களை எல்லாம் கைகுலுக்கி தனது மகிழ்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்பவர்
தற்போது  கொரோனா  பயத்தால் இந்தியர்களை போல் கைகூப்பி வணங்குவதை வரவேற்பதற்கும்

அரபு நாட்டு மன்னர்கள் கொரோனாவை கண்டு அஞ்சி நடுங்குவதற்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை

சுகாதாரதுறை கூறும் அறிவிப்புகளை மாத்திரம் மூல ஆதாரமாக வைத்து கொண்டு மார்க்க பத்வாக்களை வழங்கும்  அளவு அரபு நாடுகளின் நிலை மோசமாகிவிட்டது

இதை மறுப்போரும் அரபு நாடுகளின் சூழ்நிலையை தற்போது வரவேற்போரும் அதற்கான பொருத்தமான மார்க்க ஆதாரங்களை காட்டி வாதித்தால் இன்ஷா அல்லாஹ் அதை ஏற்கலாம்

عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَمُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ اِحْفَظِ اللّٰهَ يَحْفَظْكَ، اِحْفَظِ اللّٰهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللّٰهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللّٰهِ، وَاعْلَمْ أَنَّ اْلاُمَّةَ لَوِاجْتَمَعَتْ عَلَي أَنْ يَّنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفُعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ لَكَ، وَإِنِ اجْتَمَعُوا عَلَي أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ عَلَيْكَ، رُفِعَتِ اْلاَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால்
(ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன் குழந்தாய்! உமக்கு (முக்கியமான) சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன்
அல்லாஹ் வின் கட்டளைகளைப் பாதுகாப்பீராக
அவன் உம்மைப் பாதுகாப்பான் அவனது கடமைகளைப் பேணிவந்தால் அவனை உமக்கு முன்னால் பெற்றுக் கொள்வீர்

(அவனுடைய உதவி உமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்) ஏதேனும் கேட்க நீர் விரும்பினால் அல்லாஹ் விடமே கேட்பீராக
நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக

முழு சமுதாயமும் ஒன்றுசேர்ந்து உமக்கு நன்மை செய்ய நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த நன்மையையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

அனைவரும் ஒன்று சேர்ந்து உமக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும் அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த தீங்கையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

(விதியை எழுதும்) எழுது கோல்கள் (விதிகளை எழுதி முடித்த பின்) உயர்த்தப்பட்டுவிட்டன
(விதிகள் எழுதப்பட்ட) ஏடுகளின் மை காய்ந்து விட்டது (விதியில் எழுதப்பட்ட முடிவுகளில் சிறிதளவும் மாற்றம் செய்ய முடியாது) என்பதை அறிந்து கொள்வீராக
என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்


          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்