கொரோனா வைரஸ் பரவுவது

    கொரோனா வைரஸ் பரவுவது
   அரசாங்கத்தின் அறியாமையே

                [][][][][][][][][][][][][][][]

     12-03-2020 கட்டுரை எண் 1321
               J . Yaseen iMthadhi
                      ***********
சீனாவை பிறப்பிடமாக கொண்டது தான் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காற்று மூலமாக பரவும் வைரஸ் அல்ல
மாறாக கொரோனாவால் பாதிக்கப்பட் ஒரு மனிதனிடம் இருந்து அவனருகில் இருக்கும் மற்ற மனிதனுக்கு தாவும் தொற்று நோய் தான் கொரோனா வைரஸ்

இன்று உலகில் பல நாடுகளில் வாழும் மக்களை  கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது  என்றால் அதற்கு மூல காரணம்  பரவிய நாடுகளில் உள்ள அரசாங்கத்தின் அறியாமையும் அதற்கான  முருத்துவ வசதியும் கைவசம்  இல்லாமல் இருப்பது தான்  காரணம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மற்ற நாடுகளை விட  சீனாவில் தான் பல கட்ட பாதுகாப்பு வலையங்கள் சீன  அரசாங்கத்தால் ஓரளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

மற்ற நாடுகளை பொருத்தவரை எந்த முறைகளில் கொரோனா வைரஸ் பரவும் என்ற பாடத்தை மட்டும் அறிந்துள்ளார்களே தவிர கொரோனா வைரசை எதிர் கொள்ளும் எந்த மருத்துவமும் தற்போது கைவசம் இல்லை

இந்நிலையில் சீனா நாட்டில்  வெளிநாடுகளில் இருந்து பல காரணங்களுக்காக தங்கி இருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு நாடும் தன் குடிமக்களை  தாய் நாட்டிற்கு அழைத்ததின் விளைவு தான் பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ்  பரவி வருவதின் பின்னனியாகும்

சீனாவில் தங்கியிருந்த மக்களை அந்த நாட்டு மருத்துவத்துறையில் ஒப்படைத்து அவர்களுக்குரிய அனைத்து உதவிகளையும் போர்கால அடிப்படையில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தந்திருந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அது பாதுகாப்பாக அமைந்திருக்கும்
கொரோனா வைரஸ் பிற நாடுகளில் பரவாமலும் இருந்திருக்கும்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன் நாட்டு  மக்களை பாதுகாக்கிறோம் எனும் பெயரில் ஒவ்வொரு நாடும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து உள்நாட்டில் வாழும் குடிமக்களுக்கும் கொரோனா வைரசை  பரப்பி கொண்டு வருவது  தான் மிச்சம்

சீனாவில் தற்போது தங்கியுள்ள அயல்நாட்டு மக்களும் சீனாவில் இருந்து கொண்டே தங்களுக்கு சிகிச்சை பெற்று கொள்வது தான் அவர்களுக்கு உவந்தது என்பதையும் அவர்களால் தாய்நாட்டிலும் பரவி விட கூடாது என்ற மனநிலையும் அவர்கள் வளர்த்தி கொள்ள வேண்டும்

அது போக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சீனாவில் சிகிச்சை பெற்றாலும் உள்நாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்றாலும் அவர்களை வெளியே நடமாட முடியாமல் குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் தனி அறையில்  தான் தங்க வைக்கப்படுவார்கள் என்பதையும் உணர வேண்டும்

இந்த எதார்த்த உண்மையை தான் இஸ்லாமும் போதிக்கிறது என்பதை கடந்த சில பதிவுகளிலும் நாம் விளக்கியுள்ளோம்

         நட்புடன்   J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்