கொரோனா தில்லு முள்ளு

       கொரோனா தில்லு முள்ளு
                    *************
      10-3-2020 கட்டுரை எண் 1318
             J . Yaseen iMthadhi
                        **********
                 
1,306,313,812 ஜனத்தொகை கொண்ட சீனாவில் உருவான கொரோனா எனும் வைரஸ் அந்த நாட்டு மக்களில் கூட இதுவரை 3000 உட்பட நபர்களை தான் நேரடியாக தாக்கியுள்ளது

அந்நோயால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் படியான நபர்களின் புள்ளி விபரம் தான் மிகவும்  அதிகம்

எதார்த்த நிலை இவ்வாறு இருக்க கொரோனா எனும் வைரஸ் தாக்குதல் மூலம் உலகமே அழிந்து விடப்போவதாக ஊடகங்கள் உலவியல் தாக்குதலை திட்டமிட்டு பரப்பி கொண்டுள்ளனர்

125 கோடி இந்திய ஜனத்தொகையில் இதுவரை 46 நபர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக ஒரு புறம் சொல்லி கொண்டு கொரோனா தடுப்பு முகத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக பிரம்மையை உருவாக்குவது மக்களை முட்டாளாக்கி வணிகம் செய்யும் தந்திரமாகும்

கூட்டம் கூடினாலே அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று எதார்த்த நிலைக்கு மாற்றமான ஒரு புரளியை திட்டமிட்டு பரப்பி கொண்டுள்ளனர்

கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்று அஞ்சி ஈரானில் சிறைகைதிகள் யாவரையும் வெளியே அனுப்பியுள்ளது மடத்தனமான காரியமாகும்

இந்திய அளவில் லட்சகணக்கில் கூடும் குடியுரிமைக்கு எதிரான போராட்டங்களில் சாஹின்பாக் பகுதிகளில் கோயில் விஷேசங்களில் திருவிழாக்களில் அங்கம் வகிக்கும் எந்த மக்களும் கொரோனா வைரஸ் மூலம் நாம் தாக்கப்பட்டு விடுவோமோ என்று இதுவரை அஞ்சியதும் இல்லை
அவர்கள் அந்த வைரஸ் மூலம் தாக்கப்பட்டுள்ளனர் என்று எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை

கடவுள் மறுப்பு எனும் மடத்தனமான கொள்கையை தூக்கி சுற்றும் மக்களை விட கடவுளை நம்பும் மக்களுக்கு மனவலிமை மிகவும் அதிகம் என்பதை நடைமுறை உண்மை படுத்தி கொண்டுள்ளது

தற்காப்பு என்பது வேறு அஞ்சி நடுங்குதல் என்பது வேறு

இறைவனின் நாட்டமும் தற்காப்பும் மனவலிமையும் இருந்தால் இது போன்ற எந்த நோய்களும் மனிதனை பெருமளவு பாதிக்காது என்பது தான் எதார்த்தமான  உண்மை

சைனாவில் பணியாற்றும் நபர்களை அங்கிருந்தே சைனாவிலேயே சிகிச்சைக்கு தயார் படுத்தாமல் ஒவ்வொரு நாடும் தன் நாட்டு மக்களை சைனாவில் இருந்து அழைத்து கொண்டிருப்பது தான் தொற்று நோய் பரவலுக்கும் மூல காரணம் என்பதை கூட அறியாத அறிவிலிகளாக அரசுகள் இருப்பது தான் வேதனையான விசயம்

இறைநம்பிக்கை பகுத்தறிவு மிகுந்த இஸ்லாத்தின் தாயகம் என்று பீற்றி கொள்ளும் சவுதி அரசாங்கமும் இவ்விசயத்தில் எல்லை தாண்டி அஞ்சுவது அவர்கள் மீது வெறுப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது

குறிப்பாக இந்தியாவில் பீஜேபி அரசாங்கம் குடியுரிமையை எதிர்த்து போராடும் கூட்டத்தை இந்த செய்தியை வைத்து கலைப்பதற்கும் தனது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பல தவறுகளை சரிவுகளை டெல்லி இனப்படுகொலையை  மூடி மறைக்கவும் கொரோனா வைரஸ் செய்தியை ஆயுதமாக பயன் படுத்த திட்டமிட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிந்தே உள்ளனர்
                 *****************

5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருஞ்சீரக விதையில் சாமைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறினார்கள்
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்

சாம் என்றால் மரணம் என்று பொருள்
அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால் (பாரசீகத்தில்) 'ஷூனீஸ் (கருஞ்சீரகம்) என்று பொருள்

          நூல் ஸஹீஹ் புகாரி

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்