மதநல்லிணக்கம்
சிந்தனையே மனித நேயத்தை
மலர வைக்கும்
[][][][][][][][][][][][][][][]
07-03-2020
J . Yaseen iMthadhi
*************
இஸ்லாமிய ஆன்மீக அடையாளங்களை வெளிப்படுத்தி கோயிலை இழிவு செய்பவனும்
இந்து மதத்தின் ஆன்மீக அடையாளங்களை வெளிப்படுத்தி பள்ளிவாசலை இழிவு செய்பவனும்
நிச்சயம் அவன் ஆன்மீக பற்றாளனாக இருக்கவே முடியாது
அது போன்ற இழி செயல்களை காரணம் கூறி ஒரு சமூகத்தை குறை கூறுபவனும் வெறுப்புணர்வை தூண்டுபவனும் நிச்சயம் பகுத்தறிவாளனாக இருக்க முடியாது
மதத்தை வைத்து அரசியல் செய்பவனும் மத துவேஷத்தை தூண்டி தலைமைக்கு ஏங்குபவனும் தான் நிச்சயம் இது போன்ற கீழ்த்தரமான காரியங்களை அரசியல் பெயரால் மறைமுகமாக செய்து கொண்டிருப்பான்
பள்ளிவாசலை இடிப்பதால் இந்து மதத்திற்கு பெருமை இல்லை
கோயிலை இடிப்பதால் பள்ளிவாசலுக்கு பெருமை இல்லை
இந்து சகோதரனை கொலை செய்வதால் இஸ்லாம் வளராது
முஸ்லிம் சகோதரனை கொலை செய்வதால் இந்து மதம் வளராது
பள்ளிவாசலுக்கு உதவி செய்த இந்துவும் நம் நாட்டில் உண்டு
கோயிலுக்கு உதவி செய்த முஸ்லிமும் நம் நாட்டில் உண்டு
இந்த உண்மையை சரியாக அனைவரும் புரிந்து கொண்டால் மதத்தை வைத்து பிரிவுகளை ஏற்படுத்தும் கயவர்களை இந்திய நாட்டில் இருந்தே நிச்சயம் விரட்டி அடிக்க இயலும்
இந்தியா நாம் வாழ்வதற்குரிய தேசமே தவிர மற்றவர்களின் நிம்மதியை உயிரை பிரித்து மகிழ்சி அடையும் அகோரிகளின் தேசம்அல்ல
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment