அண்ணாச்சீ
அண்ணாச்சீ கொஞ்சம் படிங்க
அண்ணாச்சீ
♣♦♦♦♦♦♦♣
ஆக்கம் கும்தி கொய்யாலே
👶👶👶👶👶
நாட்டை ஆளுபவனை விட நாட்டில் வாழுபவன் தன்னை விட மேதாவி என்பதை மத்திய அரசே இப்போது தான் புரிந்துள்ளது !
CAA CAB NRC NRP போன்ற சட்டத்தையெல்லாம் எதிர் கட்சிகள் தவறாக பிரச்சாரம் பண்றாங்களாம் !அப்ப நீங்க சரியா பிரச்சாரம் பண்ணி நாட்டு மக்களுக்கு நல்லா புரிய வைங்க அண்ணாச்சீ
அதுக்குள்ளே என்ன அவசரம் அண்ணாச்சீ
நீங்க போட்ட சட்டத்தையே உங்களுக்கு சரியா விளக்க தெரியலேன்னு சொன்னா
அதென்ன நியாயம் அண்ணாச்சீ
ஆமா ஏற்கனவே நம்ம நாட்டில் உள்ள அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதா இருந்தா புதுசு புதுசா எதுக்கு அகதி முகாம் கட்டீட்டு இருக்கீங்க அண்ணாச்சீ
அப்ப புது அகதிகளை வெளிநாட்ல இருந்து இறக்குமதி பண்ண போறீங்களா அண்ணாச்சீ
சும்மா சொல்லுங்க அண்ணாச்சீ
இல்லே !! நம்ம நாட்டு மக்களையே அகதிகளா மாற்ற முயற்சி பண்றீங்களா அண்ணாச்சீ
மக்களிடம் ஓட்டு பிச்சை வாங்கற உங்களுக்கே தலையில இம்புட்டு அறிவு இருந்தா அண்ணாச்சீ
அந்த ஓட்டை பிச்சையா போடுற எங்களுக்கு எம்புட்டு இருக்கும் அண்ணாச்சீ
உங்க மாதிரி அரசியல்வாதிக்கு தந்திரமா சட்டம் போட தான் தெரியும் அண்ணாச்சீ
ஆனா அதை நடைமுறை படுத்துறதுக்கு நாட்டு மக்களோட ஒத்துழைப்பு தான் ரெம்ப முக்கியங்கறதை புரிஞ்சக்கனும் அண்ணாச்சீ
எங்க மகாத்மா காந்தி கொள்கையை குப்பையில போட்டுட்டு சாவர்க்கர் கொள்கையை அரியணை ஏத்த நீ ஆசை பட்டா அண்ணாச்சீ
அந்த சாவர்க்கர் கொள்கையவே மொத்தமா சுடுகாட்டுக்கு அனுப்புறதுக்கு எங்களுக்கும் தெரியும் அண்ணாச்சீ
ஏனா நாங்க அரசியல் சாசனத்தை உயிரா மதிக்குற நாட்டு மக்கள் அண்ணாச்சீ
ஆர்ப்பாட்டம் போராட்டம் உண்ணாவிரதம் சாலை மறியல் இப்படி எத்தனையோ ஜனநாயக வழிமுறை இருக்கு அண்ணாச்சீ
நாங்களும் போராட்டத்தை கைகழுவுற அய்டியாவே இல்லே அண்ணாச்சீ
இன்னுமா உங்களுக்கு புரியலை அண்ணாச்சீ
கொஞ்சம் உங்க மதவெறியை எல்லாம் ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு அண்ணாச்சீ
போட்ட சட்டத்தை தயவு செய்து வாபஸ் வாங்குங்க அண்ணாச்சீ
ஏனா நாங்களும் கொஞ்சம் சம்பாரிக்க போகனுமில்லே அண்ணாச்சீ
நீங்களே அரசியல்ல கொள்ளையடிச்சு சொத்தை சேர்த்திகிட்டே இருந்தா என்ன அர்த்தம் அண்ணாச்சீ
கொஞ்சம் நாங்களும் நியாயமா கூட உழைக்க வேண்டாமா அண்ணாச்சீ
OK அண்ணாச்சீ நான் கிளம்புறேன்
***************
நட்புடன் அண்ணாச்சீ தம்பி
கும்தி கொய்யாலே
Comments
Post a Comment