அரபு நாட்டு இமாம்கள்
அரபு நாடுகளில் பணியாற்றும்
இமாம்களுக்கு தாயீக்களுக்கு
வேண்டுகோள்
[][][][][][][][][][][][][][][][][]
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
கட்டுரை எண் 1309
********
இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட NRC CAA குடியுரிமை திருத்த மசோதா விளைவுகளை சிந்தித்து
இந்திய அளவில் உள்ள அனைத்து இமாம்களும் மக்களுக்கு ஜும்மா மேடைகளில் விழிப்புணர்வை ஊட்டி ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற இந்திய ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றி அதற்கு முன்னின்று அது தொடர்பான ஆதரவாளர்களை அரசியல்வாதிகளை சந்தித்து ஒன்று திரட்டி அவர்களால் இயன்ற அளவு இந்திய பீஜேபி அரசாங்கத்தின் உரிமை பறிப்பு சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டுள்ளனர்
!! அல்ஹம்துலில்லாஹ் !!
தஃவா செய்வதையே முழு நேர பணியாக ஏற்று அதற்காக அரபு நாடுகளுக்கு சென்று மார்க்க செய்திகளை பரப்பி வரும் இந்தியாவை சார்ந்த இமாம்கள் தாயீக்கள் அவர்களின் இந்திய தேசத்துக்காகவும் முஸ்லிம் சமுதாய மக்களுக்காகவும் இவ்விசயத்தில் எது போன்ற முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர் என்பதை இந்திய முஸ்லிம்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்
ஏனைய நாடுகளில் முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது அதை தட்டி கேட்கும் அதிகாரம் உடைய அரபு நாடுகள் அவைகளை உரிய முறையில் கண்டு கொள்ளாமல் இருந்தது தான் உலகளவில் முஸ்லிம்கள் தொடர்ந்து துன்புருத்தப்படுவதற்கு மூல காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது
பாபர் மஸ்ஜித் இடிப்பு அது தொடர்பான நியாயமற்ற தீர்ப்பு போன்றவைகளுக்கு அரபு நாடுகள் கண்டம் தெரிவித்தார்களா என்பது கூட மக்களுக்கு தெரியாது
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவின் நடைமுறை சூழலை உள்வாங்காது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுரையை வீடியோக்களாக பதிவு செய்து பரப்புவது மட்டும் போதுமானதா ?
பொறுமை வீரம் விவேகம் தியாகம் போன்ற அனைத்தையும் கற்று தரும் மார்க்கம் இஸ்லாம்
இந்திய அரசாங்கத்தின் தூதரகம் அரபுநாடுகளில் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்சியாளர்களின் வரம்பு மீறுதலை கண்டிக்கும் விதமாக அரபுக்களிடம் இந்திய அரசாங்கத்தின் குடியுரிமை திருத்த சட்டத்தின் சூழ்ச்சிகளையும் அதன் விபரீதங்களையும் இந்திய முஸ்லிம்கள் இந்தியா எனும் நாடு உருவாக்கப்படுவதற்கு செய்த தியாகங்களையும் எடுத்து சொல்லி அதன் மூலம் இந்திய அரசுக்கு சட்டரீதியாக உடனடியாக நெருக்கடி தரும் சூழல்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்
NRC CAA போன்ற சூழ்ச்சி சட்டங்களை வாபஸ் வாங்காவிட்டால் பெட்ரோல் தருவதை நிறுத்துவோம் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அரபு நாட்டு எச்சரிக்கையை உடனடியாக அமுல் படுத்த அவர்களை உந்துதல் படுத்த வேண்டும்
அதற்கு முன் இந்தியாவில் இருந்து அரபுநாடுகளில் பணியாற்ற சென்றுள்ள அனைத்து இமாம்கள் தாயீக்களை ஓர் இடத்தில் ஒன்று கூட்டி இதற்கான அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை செய்ய வேண்டும்
இந்தியாவில் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு நீங்கள் சென்றிருப்பதே இங்குள்ள முஸ்லிம்களை நம்பித்தான் என்பதை நினைவில் வையுங்கள்
மிக விரைவில் இதற்கான நடவடிக்கையை எதிர் பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்
எதிர்பார்ப்புடன்
இந்திய குடிமகன்
ஜே. யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment