Encounter ஆதரிக்கலாமா
என்கவுன்ட்டர் வழிமுறையை
( ENCOUNTER )
ஆதரிக்கலாமா ?
!!***************!!
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1294
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
நம் நாட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள அரசியல் சாசன சட்டப்படி நீதிபதிகள் தீர்ப்பை வழங்கி அந்த தீர்ப்பை அதிகாரிகள் நடைமுறை படுத்தினால் கூட சாதாரணமாக நடைபெறும் குற்றங்கள் நிச்சயம் ஓரளவு குறைக்கப்படும்
குற்றத்தை குறைப்பதற்கு வரம்பு மீறிய குற்றமான வழிகளை தேர்வு செய்வதே நம் நாட்டில் நெடுங்காலமாக நியாயங்கள் ஊனமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு தான் சரியான சான்று
என்கவுன்ட்டர் எனும் முறை பாதிக்கப்பட்ட மனிதனுக்கு மட்டும் அந்நேரம் ஆறுதல் தருமே தவிர அந்த முறை எப்போதும் நேர்மையான தீர்வை தராது
சட்டத்தை மதிக்காத குடிமக்களுக்கும் சட்டத்தை மீறி செயல்படும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அவர்கள் அணிந்துள்ள ஆடை மற்றும் அதிகாரத்தை தவிர வேறு எந்த வேறுபாடும் பார்வையில் இல்லை
என்கவுன்ட்டர் முறை நாட்டு மக்களுக்கு நன்மையை பெற்று தரும் என்று இருந்தால் என்கவுன்ட்டருக்கும் ஏன் வரலாறுகள் தொடர்கிறது
என் கவுன்ட்டர் முறை தொடர்ந்தாலே அதன் பின்னனியில் குற்றங்கள் அதிகரித்து வருவதும் சட்டங்கள் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் தான் மறைமுகமான உண்மை
விரக்தியில் இருக்கும் மனிதன் அந்த விரக்தியை விரட்டுவதற்கு எந்த வழிகளை கையாண்டாலும் அந்த வழிகளை பாராட்டும் மனநிலையில் தான் மனிதன் இருப்பான்
குறிப்பாக பெண்கள் இருப்பார்கள்
தற்போது நடத்தப்பட்ட பெண் மருத்துவர் கொலையின் என்கவுன்ட்டர் வழிமுறையை குடிமக்களில் ஒரு சாரார் பாராட்டுவதற்கும் விரக்தி தான் காரணமே தவிர மக்களின் பாராட்டுதல் நியாயமற்ற பாராட்டு அரசியல் சாசனத்திற்கு எதிரான பாராட்டு என்பதை உணர வேண்டும்
தண்டனைகளுக்கு குற்றவாளிகள் செய்யும் குற்றங்களை தான் அதிகாரிகள் ஆதாரமாக காட்ட வேண்டும்
ஆனால் என்கவுன்ட்டருக்கு குற்றவாளிகள் தங்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள் என்றும் அல்லது பிடிபட்ட குற்றவாளிகள் அதிகாரிகளை தாக்க முற்பட்டு அதை தடுக்கும் போது தற்காப்புக்கு சுடப்பட்டார்கள் என்ற போலி காரணத்தை தான் சித்தரிக்க இயலும்
இது நியாயமான வழிமுறை அல்ல
பகுத்தறிவு பேசுவதாக கூறும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் ஆதரவும் கூட இவ்விசயத்தில் பகுத்தறிவுக்கு எதிரானதாகும் அவரது ஆதரவு பாராட்டு அவர் இதுவரை பேசிய அவரது பேச்சுக்கும் முரணானதாகும்
நீதியை நிலைநாட்ட அநீதியை ஆதரிக்கும் மனோநிலையும் நீதியை நிலைநாட்ட அநீதிமான வழிமுறைகளை பின்பற்றும் செயல்முறையும் நம் இந்திய அரசியல் சாசனப்பிரகாரம் கண்டிக்கதக்கதே
குற்றவாளிகள் பிடிபட்டு அவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய மனிதநேய கொள்கையை பின் பற்றுவதாக கூறும் முஸ்லிம்கள் இவ்விசயத்தில் இஸ்லாத்தை பின்தள்ளிவிட்டு உணர்வுப்பூர்வமாக கருத்து கூறுவது அறிவிலித்தனமாகும்
உணர்வுகளை அதன் நியாயமான வழிமுறைகளோடு வெளிப்படுத்துவது தான் முஸ்லிம்களின் சரியான பண்பாகும்
وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும் அறிஞர் (அஹ்பார்)களும் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும் இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்
(முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள்
என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்
(அல்குர்ஆன் : 5:44)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment