மகான்களை மதிப்போம்
அவ்லியா என்றால் யார்
!!***************!!
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1296
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
அவ்லியா என்ற பதத்திற்கு இறை நேசர்கள் என்பது தான் எதார்த்த பொருள்
அவ்லியா என்பது பன்மை வார்த்தை வலி என்பது ஒருமை வார்த்தை
வலி என்ற பதத்தை எந்த வார்த்தையோடு இணைக்கிறோமா அதன் நேசர் என்பது தான் பொருள்
வலியுல் அபு - தந்தையை நேசிப்பவர்
வலியுன் நிஸா -
பெண்ணை நேசிப்பவர்
வலியுல்லாஹ் - இறைநேசர்
வலியுல்லாஹ் (இறைநேசர்) என்பது குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் உரித்தான சொல் அல்ல
ஆனால் அநேகமான முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வலியுல்லாஹ் என்ற பதத்தை ஜாதியை போன்று தான் நடைமுறையில் புரிந்து வைத்துள்ளனர்
அதே போல் வலியுல்லாஹ் என்றாலே அவர் மரணித்தவராக தான் இருப்பார் என்கின்ற தோரணையில் அடக்கம் செய்யப்பட்டு தர்ஹா எழுப்பப்பட்ட நபர்களை மாத்திரம் தான் வலியுல்லாஹ் என்று அடையாளப் படுத்துகின்றனர்
உயிரோடு இருக்கும் எவரையும் அவ்லியாவாக நினைப்பதும் கூட இல்லை
அவ்லியாக்களின் நெருக்கத்தை நாம் பெற வேண்டும் என்று விரும்புகின்றார்களே தவிர
நாமும் அவ்லியாவாக மாற முயற்சிக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் கட்டளையை சிந்திப்பது இல்லை
இறைவனின் பார்வையில் அனைவரும் அவ்லியாவாக மாற வேண்டும் என்பது தான் இறைவனே நம்மிடம் எதிர்பார்க்கும் விசயமாகும்
சுருங்க சொன்னால் திருக்குர்ஆன் மூலமும் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் மூலமும் எது போன்ற கட்டளைகளை பிறப்பித்துள்ளானோ அவைகளை இயன்றவரை நடைமுறை படுத்துவதும் தடைசெய்யப்பட்ட காரியங்களில் இருந்து விலகி இருப்பது தான் வலியுல்லாஹ் என்ற தகுதிக்கு உரித்தான விளக்கமாகும்
நாம் யாரை வலியுல்லாவாக கருதுகிறோமோ அவர்கள் இறைவனின் பார்வையில் வலியாக இல்லாமலும் இருக்கலாம்
நாம் யாரை வலியுல்லாவாக இருக்க மாட்டார் என்று முடிவு செய்கிறோமோ அவர் இறைவனின் பார்வையில் வலியுல்லாவாகவும் இருக்கலாம்
மறுமை நாளில் இறைவனின் சந்நிதானத்தில் இறைவனே தீர்மானிக்கும் விசயத்தில் நாமே தலையிட்டு இவர் அவ்லியா அவர் அவ்லியா என்று முடிவு செய்யும் அதிகபிரசிங்கதனத்தை தவிர்ப்போம்
இறைவனும் இறைதூதரும் சாட்சி கூறிய நபர்களை தவிர வேறு எவரையும் வலியுல்லாஹ் என்று பட்டம் சூட்டி அவர்களுக்கு மாத்திரம் விஷேசமாக மண்ணறைகளை எழுப்பி பெருமை படும் வரம்பு மீறுதலை தவிர்ப்போம்
அதிகபட்சமாக இறைநேசர்களுக்காக பிராத்தணை செய்வது தான் நம் மீது இறைவன் ஏற்படுத்திய விதிகளில் ஒன்று
மாறாக இறைநேசர்களிடம் கையேந்தி நம் மறுமை வாழ்வை நாமே நாசமாக்கி விட வேண்டாம்
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்
لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்
(அல்குர்ஆன் : 10:62,63,64)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment