ஆன்மீகமும் அநாகரீகமானது ஏன்
ஆன்மீகமும் அநாகரீகமானது
ஏன் எதனால்
!!***************!!
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1295
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
ஆன்மீகத்தின் பெயரால் படித்தவன் முதல் பாமரன் வரை ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் நம் நாட்டில் நெடுங்காலமாக நடந்து வருகிறது
ஊடகங்கள் ஆன்மீகத்தின் பெயரால் நடைபெறும் கற்பழிப்பு விபச்சாரம் கொள்ளையடித்தல் போன்றவைகளை வெட்ட வெளிச்சமாக்கினாலும் அதன் மூலம் உணர்வு பெறாமல் மீண்டும் மீண்டும் ஆன்மீக போலிகளிடம் ஏமாறும் பெண் இனத்தின் பேட்டிகளை காணும் போது நகைப்பும் வேதனையும் தான் ஏற்படுகிறது
மலம் ஜலத்தை சுமக்கும் எவரும் கடவுளாக முடியாது என்பதையும்
ஆன்மீகவாதியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டால் அவர்கள் ஆசாபாசங்களுக்கு அடிபணியாது இருப்பார்கள் என்ற மடமைத்தனமான மூட நம்பிக்கை தான் இதற்கு மூல காரணம்
இது போன்ற ஆன்மீக போலிகளுக்கு உத்தமர்கள் என்று மீடியாவின் மூலம் சாட்சிகளை கூறும் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்
மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அரசாங்க ஊழியர்களும் அதிகாரிகளும் ஆன்மீக போலிகளிடம் மண்டியிட்டு கிடப்பது அவமானத்திற்குரிய செயலாகும்
ஆன்மீகத்தின் பெயரால் நடமாடும் அயோக்கியர்களுக்கு ஆசிரமம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்
கடவுள் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்களே அவ்வாறு இருக்கும் போது மனிதர்களில் சிலர்களை மாத்திரம் கடவுள் தேர்வு செய்து அவர்களுக்கு கடவுளின் அம்சத்தை கொடுக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கடவுளுக்கு கிடையாது
ஆன்மீகத்தின் பெயரால் பல கோடிகளை சுருட்டி சொர்க்க வாழ்வை நடத்தும் போலி ஆன்மீகவாதிகள் அறிவாளிகள் தான்
அது போன்ற கயவர்களை மனிதர்களில் புனிதர்களாக கருதும் மக்கள் தான் நம்மை பொருத்தவரை குற்றவாளிகள்
பகுத்தறிவும் படிப்பறிவும் கூட இந்த உண்மையை இனியும் உணர வைக்கவில்லையானால் அவர்களை மனித இனத்தில் இணைத்து பார்ப்பதையே வேடிக்கையாக தான் பார்க்க முடியும்
قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ غَيْرَ الْحَـقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِيْلِ
வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்
அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர் என்றும் (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 5:77)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment