நித்தியானந்தா ஞானக்கண்

      நித்தியானந்தாவின்  மூன்றாம் 
                      கண்ணும்
       பக்தர்களின் முடமான அறிவு
                      கண்ணும்

           •••••••••••••••••••••••••••••••
              கட்டுரை எண்1293
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

எந்த ஆன்மீகம் மனிதனின் ஒழுக்க வாழ்வையும் பகுத்தறிவையும் பக்குவப்படுத்தவில்லையோ அந்த ஆன்மீகமே மனித சமுதாயத்தின்  சாபக்கேடாக மாறும்

மனிதன் தனது பகுத்தறிவு மற்றும் பிற புலன்கள் மற்றும் இரு கண்களை கொண்டு தான் எந்த ஒன்றையும்  அறிய முடியும்

ஆனால் போலி ஆன்மீகவாதிகளோ  மூன்றாம் ஞானக்கண் மூலம் பிற மனிதர்களால் காண இயலாதவைகளை  காணுவார்கள் என்பதும் அதன் மூலம் இறைவனையே பார்ப்பார்கள் என்பதும் அதனால் அவர்கள் இறைவனிடம் கேட்கும் வரத்தை உடனே பெறும் வல்லமையை பெற்றுள்ளார்கள் என்பதும் அதன் மூலம் அவர்கள்  மனித தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் நம்பப்படுகிறார்கள்

அவ்வாறு போலி ஆன்மீகவாதிகளால் தங்களது தந்திரத்தின் மூலம் மந்திரமாக நம்ப வைக்கப்படுகிறார்கள்

எல்லோரை போலவே நானும் மனிதனாகவே  உள்ளேன் என்று எந்த ஆன்மீகவாதியும் கூறியது இல்லை

மாறாக மனித தன்மைக்கு அப்பாற்பட்ட சில சக்திகள்  தங்களிடம் இருப்பதாகவே  வெளிக்காட்டி கொள்வார்கள்

காரணம் இல்லாத ஒரு சக்தியை  இருப்பதாக கூறினால் சில வேளை அவர்களிடம் மாத்திரம் அந்த சக்தி இருக்குமோ என்று சாதாரண மனிதனின்  எண்ணம் கற்பனை செய்ய கூடும்

அதே நேரம் மனிதனிடம் இருக்கும் சாதாரண  பலவீனங்களை இல்லை என்று ஆன்மீகவாதிகள் சொல்லும் போது அந்த வாதத்தை சரியா தவறா என்று மனிதனின் எண்ணம் ஆய்வு செய்ய முற்படும்

அதனால் தான் நான் மலம் ஜலம் கழிக்கவே மாட்டேன் என்று எந்த ஆன்மீகவாதி கூறியது இல்லை

நான் உணவு அருந்தவே மாட்டேன் என்று எந்த  ஆன்மீகவாதியும் கூறியது  இல்லை

நான் அதிகாலை பல் துலக்காமலேயே மணப்பேன் என்று எந்த  ஆன்மீகவாதியும் கூறியது  இல்லை

எனக்கு பணத்தின் தேவையே இல்லை என்று  ஆன்மீகவாதியும் கூறியது  இல்லை

எனக்கு உறக்கமே வராது என்று  எந்த ஆன்மீகவாதியும் கூறியது  இல்லை

எனக்கு எந்த நோயும்  தாக்காது என்று எந்த  ஆன்மீகவாதியும் கூறியது  இல்லை

எனக்கு முதுமையே வராது என்று எந்த  ஆன்மீகவாதியும் வாழ்ந்து காட்டியது  இல்லை

எனக்கு மரணமே ஏற்படாது என்று எந்த  ஆன்மீகவாதியும் உயிருடன் எப்போதும் இருப்பதும்  இல்லை

அவ்வரிசையில் பாமர  மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் போலி ஆன்மீகவாதிகளில் ஒருவர் தான் நித்தியானந்தா

நடிகை ரஞ்சிதாவோடு விபச்சாரத்தில் ஈடுபடும் போது அந்த இழி செயலை வெளிப்படுத்துவதற்கு நம்மை அறியாமல் நமது அறைக்குள் ரகசிய கேமராவை நம்மை சார்ந்தவர்களே ஒளித்து வைத்துள்ளனர் என்பதை கூட தனது  மூன்றாம் ஞானக் கண்ணால் கண்டு பிடிக்க முடியாமல் கேவலப்பட்டு போன அயோக்கியனே போலி ஆன்மீகவாதி நித்தியானந்தா

தற்போது  கள்ளத்தனமான பாஸ்போட் மூலம் இந்தியாவில் இருந்து ஒளிந்து மறைந்து தப்பித்து போன ஏமாற்று பிறவியே போலி நித்தியானந்தா

இதுவரை பல விதமான ஆதாரங்களை நிரூபணமாக்கி நித்தியானந்தாவின் அயோக்கிய தனத்தையும் ஒழுக்க கேடுகளையும் ஊடகங்கள்  தோலுரித்து காட்டிய பிறகும் அவரின் மீதுள்ள குருட்டு பக்தியால் அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்றும் அவையாவும் அவரது பெயரை கெடுக்க அவரது எதிரிகள் செய்த  கிராபிக்ஸ் வீடியோக்கள்  என்றும் மிமிக்ரி ஆடியோக்கள்  என்றும் தங்களது பகுத்தறிவுக்கு தாங்களே திரையிட்டு கொள்ளும் அறிவிலிகள் தான் ஏராளம்

ஆன்மீகத்தின் பெயரால் இது போல் சிந்தனையற்ற பக்தர்கள் இருக்கும் வரை  இன்னும் ஓராயிரம் நித்தியானந்தாக்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்

இஸ்லாமிய பெயரிலும் இது போல் சில மதகுருக்களும் அவர்களுக்கு ஜால்ரா போட்டு சுற்றும் சில சிங்கிடிகளும் இருப்பதை மறுக்க இயலாது

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌  وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏ 

அவர்கள் இறைவனை விட்டு  தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை

அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்

          (அல்குர்ஆன் : 9:31)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏ 

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,
சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்

மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்

             (அல்குர்ஆன் : 9:34)

           நட்புடன்  J . இம்தாதி

          
     

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்