பதிவுகளை பக்குவப்படுத்துவோம்
பதிவுகளை பக்குவப்படுத்துவீர்
பண்புகளை செழுமைப்படுத்துவீர்
!!***************!!
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1293
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
ஒரு கருத்தை நளினமாக தன்மையாக அக்கரை உணர்வுடன் வெளிப்படுத்தும் போது ஏற்படும் சமூக மாற்றத்தை
ஆத்திரத்துடனும் கடுமையான சொற்களுடன் வெளிப்படுத்தும் போது நிச்சயம் ஏற்படுத்தாது
சமூகவலைதளங்களில் பல வருடங்களாக வலம் வரும் முஸ்லிம்கள் கூட இதை இன்னும் உணரவில்லை
கொள்கை முரண்பாடுகளை சமூக தீமைகளை கண்டிக்கிறோம் எனும் பெயரில் பரப்பப்படும் பலரின் பதிவுகள் கீழ்த்தரமாகவும் அருவருக்க தக்க வாசகங்களுடனும் அமைந்திருப்பது அவர்களின் கண்ணியத்தை நன்மதிப்பை இழக்க வைத்து கொண்டிருப்பதை அவர்கள் ஏனோ அறியவில்லை
முக தோரணையில் இஸ்லாமிய வக்காரத்துடன் ( அதாவது ஈர்ப்பு தன்மையுடன்) இருக்கும் பலர்கள் அவர்களின் கீழ்த்தரமான பதிவுகளால் அறிவீனர்களாக காட்சி தருகின்றனர்
அவர்கள் போடும் கருத்துக்களை வட்டமடிக்கும் வாசகர் வட்டகங்களின் எண்ணிக்கையை பார்த்து பூரிப்படைவதே அவர்களின் பதிவின் தரத்திற்கு நற்சான்று இல்லை
மதுபான கடைகளிலும் சினிமா தியேட்டர்களிலும் ஆபாச அரங்குகளிலும் கூட வாசகர் கூட்டம் நிறைந்தே காணப்படும்
அதனால் அந்த கூட்டத்தை உருவாக்கியதில் எனது பங்களிப்பு அதிகம் என்று ஒருவன் பூரிப்படைந்தால் அந்த பூரிப்பு அவனது அறிவீனத்திற்கு தான் சரியான சான்று
ஒருவன் போடும் பதிவுகள் சமூகத்தை பக்குவப்படுத்தும் பதிவுகளாக இருக்கின்றதா என்பதை விட அந்த பக்குவத்தை முதலில் அவனது எழுத்துக்கள் பேச்சுக்கள் பெற்றுள்ளதா என்பதை தான் சிந்தனைவாதிகள் நிச்சயம் உற்று நோக்குவார்கள்
வாய்களால் வெளிப்படும் தீய வார்த்தைகளில் இருந்து தவிர்ந்து இருப்பது எந்தளவுக்கு அவசியமானதோ அதே அளவு தனது எழுத்துக்களால் மாற்று கருத்துக்களால் தீய வார்த்தைகளை விட்டு ஒதுங்கி இருப்பதும் முக்கியமான கடமையாகும்
மார்க்க அறிஞர்களில் சிலர்களும் கூட அவர்கள் போடும் பதிவுகளில் பிற அறிஞர்களை துதிபாடுபவர்களாக அல்லது தன் கருத்துக்கு மாற்றமான கொள்கையுடைய நபர்களை இகழ் பாடுபவர்களாக அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் ஆள் சேர்க்கும் புரோக்கர்களாக விளம்பரதாரர்களாக வலம் வருவது கேவலமாக உள்ளது
عَنْ عَبْدِ اللّٰهِؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ عَلَي شِرَارِالنَّاسِ
இறுதித் தீர்ப்பு நாள் மிகத் தீயவர்களுடைய காலத்தில் தான் வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்லிம்
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلاَ اُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَي النَّارِ، وَبِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ؟ عَلَي كُلِّ قَرِيْبٍ هَيِّنٍ سَهْلٍ
நரகத்தில் நுழைவது எவருக்கு ஹராம் எவரை நரகம் தீண்டுவது ஹராம் என்பதை உங்களுக்கு நான் சொல்லவா?
கவனமாகக் (கேளுங்கள்) மக்களுடன் நெருங்கியிருப்பவர் மிக்க மென்மையான சுபாவமும் நளினமான இயல்பும் கொண்ட ஒவ்வொருவரையும் நரக நெருப்புத் தீண்டுவது ஹராமாக்கப்படும் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment