பீஜேபி வினை

    தன்வினை தன்னையே சுட்டது
      பீஜேபி அரசாங்கம் புலம்பல்

                ***************      
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
                     ***********
            கட்டுரை எண் 1304
                       **********
      
முஸ்லிம் சமூகத்தை இந்தியளவில்  ஒடுக்குவதற்காக பீஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட  குடியுரிமை திருத்த சட்டத்தால் இப்போது அந்த சட்டத்தை கொண்டு வந்த பீஜேபி அரசாங்கம் தான் அவர்களை அரவணைத்த கட்சி மற்றும் இதர நபர்களால் ஒடுக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறது

பீஜேபி கட்சியின் காவி கொள்கையில் ஒரே கயிற்றை பிடித்து வந்த சிவசேனா கட்சியும் அந்த கட்சியை சார்ந்த முக்கியஸ்தர்களும் இன்று பீஜேபி கட்சியை மாறி மாறி விமர்சிக்க துவங்கி விட்டனர்

தாமரை தமிழகத்தில் மலராது என்று கிண்டல் செய்த போது அதை ஜீரணிக்காத சிவசேனா  இப்போது தாமரை சேற்றில் கூட மலராது என்று ஒர்லி தொகுதி MLA ஆதித்யா தாக்கரே பீஜேபி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்

அசாமில் 12 பீஜேபி MLA பொறுப்பு வகிப்போர் பீஜேபியை கடுமையாக விமர்சித்து போர்கொடி தூக்கி உள்ளனர்

பீஜேபி கூட்டணி கட்சி அகாலிதளம் முஸ்லிம்களை குடியுரிமை திருத்த சட்டத்தால் முடக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளது

பீஜேபியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு யார் ஆதரவு கரம் நீட்ட வேண்டுமோ அத்தகையை இலங்கையை சார்ந்த சீக்கியர்களும் இந்து சமூகத்தவர்களும் பீஜேபி கட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி பீஜேபி கட்சியை அவமதித்து அறிக்கை தந்து விட்டனர்

அமெரிக்கா மத சுதந்திர கூட்டமைப்பு பீஜேபி கட்சியின் அமித்ஷா அமெரிக்கா செல்லும் உரிமையை இந்த சட்டத்தால் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது

இஸ்ரேல் அமெரிக்கா பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களிடம் இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளாதீர்கள் என்று அறிக்கைகள் தந்து இந்தியாவின் அந்நிய செலாவணி வரவுக்கு பூட்டு போட்டுள்ளது

தன் வினை தன்னையே சுடும் என்ற பழமொழிக்கு நடைமுறையில் சரியான உவமை பாத்திரங்களாக பீஜேபி அரசாங்கம் மாறி விட்டது

சூழ்ச்சி செய்பனுக்கெல்லாம் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ் ( கடவுள் ) என்ற திருமறை குர்ஆனின் எச்சரிக்கை உண்மையை பீஜேபி அரசாங்கம் இனியாவது உணருமா

ஒட்டெடுப்பு கருவியில் பல விதமான தில்லுமுள்ளுகளை செய்து ஐந்து வருடம் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள பீஜேபி கட்சியின் வலிமை இந்திய குடிமக்களின் ஜனநாய ரீதியான  ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளுக்கு முன் அவமானப்பட்டு தலைகுனிவை சந்தித்து விட்டது

இனியும் இன்ஷா அல்லாஹ் பீஜேபி கட்சி பாடையை சந்திக்கும் நாள் மிகவும் குறைவு என்பதை இந்திய மக்கள் புரிந்தே உள்ளனர்

    اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ‌  فَلَا يَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ‏ 

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்

              (அல்குர்ஆன் : 7:99)

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏ 


(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்
அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்
சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்

          (அல்குர்ஆன் : 8:30)

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்