அநாகரீகமான பண்பாடு
அநாகரீகமான பண்பாடு
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண்1292
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
நாம் நமது சொந்தம் மற்றும் நண்பர்கள் இல்லங்களுக்கு விருந்துக்கு செல்லும் பொழுது அவர்கள் நம்மை எந்தளவு உபசரிக்க வேண்டும் என்று மனதளவில் விரும்புகின்றோமோ அதே அளவு அல்லது அதை விட கூடுதலாக அவர்கள் நம் இல்லங்களுக்கு வருகை தரும் போது அவர்களை உபசரிப்பதில் நாம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்
அதிலும் குறிப்பாக ஒரு நபரின் இல்லத்திற்கு நாம் விருந்துக்கு சென்றால் அங்கு செல்வதை அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்து விட்டு செல்ல வேண்டும்
அதன் பின் அவர்களின் வீட்டு சூழ்நிலைகள் அவர்களின் வருமானம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நமது செயல்பாடுகளையும் அவர்களின் இல்லத்தில் தங்குதலையும் அமைத்து கொள்ள வேண்டும்
குடும்பத்தோடு சென்று சொந்தங்களின் தலையில் நமது செலவினம் மற்றும் ஊர் சுற்றுலா தொடர்பான அனைத்து விதமான செலவு பாரங்களை இறக்கி வைத்து விருந்தளிக்கும் நபர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது அநாகரீகமான பண்பாடாகும்
இந்த நபர் விருந்துக்கு நம் வீட்டுக்கு வருகை தந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவல் விருந்தளிக்கும் நபர்களுக்கு ஏற்பட வேண்டும்
அந்த எண்ணத்தை ஏற்படுத்தாது இவர்கள் எதற்கு நம் இல்லத்திற்கு வருகிறார்கள் எப்போது நம் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்ற எரிச்சலோடு நமக்கு விருந்தளிக்கும் சொந்தங்களை பந்தங்களை யோசிக்க வைப்பது கீழ்த்தரமான செயலாகும்
வார்த்தைகளால் நாம் இதை தொகுத்து வழங்கினாலும் இது போன்ற தர்ம சங்கடத்தை நம்மில் பலர்கள் நிச்சயம் வாழ்நாளில் சிலர்கள் மூலம் அனுபவித்து இருப்போம்
விருந்துக்கு செல்லும் இடங்களில் அவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டு அவர்களின் பிரிவுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக இருக்கும் இழிபிறவிகளும் மனித சமுதாயத்தில் ஏராளம் உண்டு
இஸ்லாத்தை கொள்கையாக ஏற்றுள்ள நாம் இந்த விசயங்களில் கவனம் பேணாது இருப்பது நம் மறுமை வெற்றியை நாசமாக்கி விடும்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰ
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள் நீங்கள் ( விருந்துக்கு ) அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள் அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள் பேச்சுகளில் ( அரட்டையடித்து) மனங்கொண்டவர்களாக அமர்ந்து விடாதீர்கள்
நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்
இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்
ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்
அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும் அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல
(அல்குர்ஆன் : 33:53)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment