குடியுரிமை சட்டம் எதிர்க்கப்படுவது ஏன்

        குடியுரிமை  திருத்த சட்டம்

          எதிர்க்கப்படுவது ஏன்

                    ***************      
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
                     ***********
            கட்டுரை எண் 1303
                       **********
நாட்டில் நடை முறையில் இருக்கும் ஒரு சட்டத்தை திருத்துவதாக இருந்தாலும் அல்லது ஒரு சட்டத்தை  தள்ளுபடி செய்வதாக இருந்தாலும் அல்லது ஒரு சட்டத்தை புதுமையாக கொண்டு வருவதாக இருந்தாலும் அதற்கான அவசியத்தை  அல்லது நடைமுறையில் உள்ள  சட்டத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை  அல்லது அந்த சட்டத்தின்  குறைபாடுகளை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டு தான்  ஒரு சட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்

!அதற்கு பெயர் தான் ஜனநாயகம் !

தற்போது பீஜேபி அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு அவசர அவசரமாக  திணிக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பின்னனி அந்தரங்கமானது

இந்தியாவுக்கு அப்பாற்பட்டு அந்நிய நாட்டில்  இருந்து வரும் எவருக்கும் இந்திய திருநாட்டில்  குடியுரிமை தர முடியாது என்று சட்டத்தை திருத்துவதோ அல்லது தருவோம் என்று சட்டத்தை வகுப்பது  தான் நியாயமாக இருக்க முடியுமே தவிர

அந்நிய நாட்டில் இருந்து வருகை தரும் எவருக்கும் இந்திய குடியுரிமையை  தருவோம் ஆனால் முஸ்லிம்களாக வரும் எவருக்கும் குடியுரிமையை  தர மாட்டோம் என்பது ஓரவஞ்சனையும் மததுவேஷமும் ஆகும்

இந்தியாவின் மதசார்பற்ற அரசியல்சாசனம் பிரகாரம் பதவியை பெற்றவர்கள் அவர்கள் சார்ந்த  மதம்  சார்புள்ளவர்களாக சட்டங்களை வகுப்பதும் அதை குடிமக்களிடம் திணிப்பதும்  தான் ஆணவத்தின் உச்சமாகும் குடிமக்கள் எதிர்க்கும் பின்னனியாகும்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் எழுதப்பட்ட  அரசியல் சாசனத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்தின் ஐந்து ஆறாம் பிரிவின் பிரகாரம் இந்தியாவில் வாழும் எந்த குடிமகனையும் இந்தியர் இல்லை என்று புறம் தள்ள முடியாது என்பதையும் இந்நேரத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல அனைத்து சமூக மக்களும் உணர வேண்டும்

ஆனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்கு மூல காரணம் அந்நிய நாட்டில் இருந்து அகதிகளாக வரும் முஸ்லிம்களை மாத்திரம் நாங்கள் இந்தியர்களாக அங்கீகரிக்க மாட்டோம் என்ற ஓர  வஞ்சனையை எதிர்த்து தான் என்பதை நினைவு படுத்துகிறோம்

ஒன்று வெளிநாடுகளில் இருந்து அடைக்கலம் கோரும் அனைவரையும் இந்திய திருநாட்டில்  அகதிகளாகவே பாருங்கள்
அல்லது இந்திய குடியுரிமையை அனைவருக்கும் பொதுவாக வழங்கி அரவணைத்து பழகுங்குங்கள் என்பது மட்டுமே எங்களது ஒட்டு மொத்த குரலாகும்

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் நாங்கள் குடியுரிமை வழங்குவோம் ஆனால் வெளியில் இருந்து அடைக்கலம் தேடி வரும்  இந்து சமுதாயத்திற்கு நாங்கள் குடியுரிமை வழங்க மாட்டோம் என்று  சட்ட திருத்தம் இயற்றப்பட்டு இருந்தாலும் அதையும் நாங்கள் எதிர்த்து இருப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்

قُلْ مَنْ ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ‌ وَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏ 

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று (நபியே!)
நீர் கூறுவீராக

       (அல்குர்ஆன் : 33:17)

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்