பாகிஸ்தான்
பாகிஸ்தான் பூச்சாண்டியும்
இந்திய முஸ்லிம்களின் நிலையும்
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
கட்டுரை எண் 1301
**********
பாகிஸ்தான் என்பது நமது அண்டை முஸ்லிம் நாடு என்பது மட்டுமே இந்தியர்கள் அனைவரும் ஆதாரப்பூர்வமாக அறிந்த உண்மை
பாகிஸ்தானில் வாழும் அவர்களின் கொள்கை அந்நியர்கள் குறிப்பாக இந்து சமூகத்தவர்கள் எவ்வாறு அங்கு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியர்கள் எவருமே நேரடியாக சென்று அங்கு கண்டது இல்லை
பாகிஸ்தானோடு வணிக ரீதியான தொடர்பும் கூட இந்தியர்களுக்கு இல்லை
ஆனால் இந்தியாவுக்கு முதல் விரோதியாக பாகிஸ்தான் எனும் அண்டை நாட்டை தான் தொடர்ந்து கயவர்களால் திரைப்படங்களிலும் சினிமா கூத்தாடிகளின் மூலமும் சித்தரிக்கப்பட்டு இந்தியர்களின் உள்ளங்களில் நஞ்சூட்டப்பட்டுள்ளது
கிரிக்கெட் விளையாட்டில் திறமை இருக்கும் அணி தான் வெற்றியடையும் என்ற சாதாரண பகுத்தறிவும் கூட இல்லாமல் பாகிஸ்தான் அணி எப்போதும் தோற்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதும் அவ்வாறு தோற்று விட்டால் இந்தியாவே வல்லரசாக மாறி விட்டது என்று கற்பனையில் பலர்கள் பூரிக்கின்றனர்
விளையாட்டு விசயங்களில் தேச பக்தி இருப்பது போல் நமது இந்தியன் நினைத்தாலும் சரி அல்லது அவ்வாறு பாகிஸ்தானியன் நினைத்தாலும் சரி நிச்சயம் அவன் சிந்தனைவாதியாக இருக்க இயலாது மாறாக அவன் பக்குவம் இல்லாத குடிமகனாக மட்டுமே இருக்க இயலும்
உண்மையில் தற்போது பரப்பப்படுவது போல் நமது இந்திய தேசத்துக்கு எதிரான நாடாக பாகிஸ்தான் எனும் அந்நிய நாடு இருந்திருந்தால் இந்தியாவுடைய தூதரகம் பாகிஸ்தானிலும் பாகிஸ்தானின் தூதரகம் இந்தியாவிலும் பல காலமாக ஏன் இருந்து வருகிறது என்ற சாதாரண உண்மையை கூட இவர்களுக்கு சிந்திக்க தெரியவில்லை
டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடியாக பேரூந்து சேவையை வாஜ்பாய் ஆட்சியில் செயல்முறை படுத்தப்பட்டதை கூட சிந்திக்க தெரியாத கோமாளிகளாக இவர்கள் உள்ளனர்
இந்தியாவில் பிறந்த எந்த முஸ்லிமும் நாங்கள் பாகிஸ்தான் செல்கிறோம் என்று இதுவரை ஆசைபட்டது இல்லை
ஆனால் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பீஜேபி அத்வானி போன்றோர் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் செல்லுமாறு எதிர்பார்ப்பதும் அது போல் வெறுப்புணர்வை பரப்புவதும் தான் நகைச்சுவையாக உள்ளது
முஸ்ஸிம் நாடாக இருக்கும் பாகிஸ்தான் நாட்டில் அங்கு வாழும் இந்து சமுதாயத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசும் வெளிப்படுத்தியது இல்லை
அந்த நாட்டில் வாழும் இந்து சமூகத்தவர்களும் பாகிஸ்தானில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எந்த விதமான அறிக்கையும் புலம்பலும் போராட்டங்களும் அந்த நாட்டில் நடத்தியதாக அதிகாரப்பூர்வமான எந்த சான்றும் இல்லை
ஆனால் மதசார்பற்ற நமது இந்திய திருநாட்டில் ஒரு மதத்தை மாத்திரம் மையமாக வைத்து மதசார்புள்ள நாடாக செயல்படும் அரசாங்கம் இருப்பது விந்தையாக உள்ளது
வெள்ளையனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது என்று அறிந்துள்ள இந்தியர்களுக்கு இந்தியா என்ற நாடே முஸ்லிம் முகலாய மன்னர்களின் வருகைக்கு பிறகு தான் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது என்பதை அறியும் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டது
எங்கள் முன்னோர்களான முகலாய மன்னர்களின் வருகையாலும் அவர்களின் ராஜ தந்திரத்தாலும் உருவாக்கப்பட்ட இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டையும் நேசிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இல்லை
பிறக்கும் நாட்டை புறம் தள்ளிவிட்டு அந்நிய நாட்டை நேசிக்க வேண்டும் என்று இஸ்லாமும் பாடம் நடத்தவில்லை
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ
ஈமான் கொண்டவர்களே
நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்
(அல்குர்ஆன் : 33:70)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment