வாலிபமே வெற்றியின் ஏணிப்படி
வாலிபமே வெற்றியின்
ஏணிப்படி
=========================
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1299
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
மனிதன் உலகில் எந்த ஒன்றின் மீதும் ஆர்வம் கொள்ளவும் ஆசைபடவும் இயலும்
ஆனால் அந்த ஒன்றை துடிப்புடன் அடைவதற்கு மனிதனின் வாழ்வில் இறைவன் உடலியல் ரீதியாக ஏற்படுத்தியுள்ள ஒரு பாக்கியம் தான் வாலிபம்
வருங்காலத்தில் சிறந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சரி
அல்லது தன்னை நம்பியுள்ள குடும்பத்தை பொருளியல் ரீதியாக உயர்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சரி
அந்த மனிதன் அவனது வாலிப காலத்தை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் நிச்சயம் அந்த நிலையை அடைய முடியும்
அறிவியல் வளர்ந்த தற்காலத்தில் ஒரு மனிதனின் வாலிபத்தை முடமாக்கி அவனது எதிர் காலத்தை ஊனமாக்கும் சூழ்நிலைகள் தான் மிகவும் அதிகம்
குறிப்பாக பொழுது போக்கில் தனது நேரத்தை வீணடிக்கும் வாலிபன் நிச்சயம் அவனது முதுமை பருவத்தில் கவலைகளை தான் சட்டையாக அணிந்து கொள்வான்
தனது வாழ்வில் இந்த நேரத்தில் இதை எதை செய்ய வேண்டும் என்று அவனது அறிவே சொல்லும் நிலையில் அந்த ஒன்றை அந்நேரம் செய்யாது இருக்கும் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலைகளும் தொடர்புகளும் மதிமயக்கங்களும் நட்புகளும் தான் ஒரு வாலிபனின் பருவத்திற்கு முதல் விரோதி என்பதை அவனே சுயமாக உணர்ந்தால் அது தான் ஒரு வாலிபனின் முக்கியமான பாக்கியம்
அந்த பாக்கியத்தை கருத்தில் கொண்டு தனது நிலையை மாற்றாத வரை எந்த வாலிபனும் அவனது எதிர் காலத்தில் வெற்றியின் வாசனையை கூட முகர முடியாது
வாழ்வில் எந்த ஒன்றை அடைவதற்கு அதீதமான முயற்சிகள் தேவை இல்லையோ அந்த ஒன்றை அடைவதற்கு அவனது நேரங்களை வீணாக செலவழித்தால் அவன் நிச்சயம் பாதாள சாக்கடையில் தான் வீழ்வான்
படிக்கும் காலத்தில் உழைப்பில் கவனம் உழைக்கும் காலத்தில் திருமணத்தில் கவனம் என்று காலத்தை முரண்பட்டு வாலிபன் கழித்தால் நிச்சயம் அவன் வாழ வேண்டிய பருவத்தில் மனதளவில் விரக்தியை சந்தித்து அதனால் முதுமையை விரைவில் அடைவான்
இத்தகையோர் தான் வாழ வேண்டிய பருவத்தில் உலவியல் நோயாளிகளாக பைத்தியங்களாக சமூகத்தில் நடமாடுகின்றனர்
டைம் பாஸ் என்பது வாலிப பருவத்தின் ஒரு அங்கமாக இருக்கலாமே தவிர
டைம் பாஸ் செய்வதே அவனது வாழ்வின் இலட்சியமாகி விட கூடாது
இயன்றவரை வாலிபத்தின் காலத்தை எந்தளவுக்கு ஆன்லைன் தொடர்புகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்கிறானோ அந்தளவுக்கு அந்த வாலிபனின் எதிர் காலம் நிச்சயம் பிரகாசத்தை அடையும்
****************
660 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்
நீதியை நிலை நாட்டும் தலைவர்
அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்
பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்
அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்
உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று சொல்லும் மனிதர்
தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்
தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நூல் ஸஹீஹ் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment