குடியுரிமை திருத்த சட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தில்
மிளிரும் இஸ்லாம்
************************
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1297
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
கொள்கையின் ஈர்ப்பாலும் அதன் தெளிவான கோட்பாடுகளாலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உள்ளத்தை ஈர்த்து வரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி வரும் முஸ்லிம்கள் அதிகரித்து வரும் சூழலில்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வரும் முஸ்லிம்களுக்கும் அங்கீகரீக்கப்பட்ட குடியுரிமையை வழங்கினால் இந்தியாவில் இஸ்லாமும் அதை பின்பற்றும் முஸ்லிம்களும் தான் விரைவில் முன்னனியில் இருப்பார்கள் என்ற உளவியல் அச்சமே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர ஆட்சியாளர்களை யோசிக்க வைத்துள்ளது
தூரப்பார்வையில் பார்க்கும் போது இது முஸ்லிம் சமுதாயத்தை இந்திய திருநாட்டில் இருந்து பின்னடைவுக்கு ஒதுக்குவதாக தென்பட்டாலும் முஸ்லிம் சமுதாயம் பின்பற்றி வரும் இஸ்லாத்தின் தனி சிறப்பை தான் இந்த அதிரடி நிகழ்வு மறைமுகமாக காட்டுகிறது என்பதே உண்மை
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பிற மக்களின் உள்ளங்களை முஸ்லிம்கள் கவர்ந்ததை விட இஸ்லாத்தை பற்றி தவறான பிரச்சாரம் செய்பவர்களின் மூலமும் இஸ்லாத்தை ஒடுக்க கடுமையாக முயற்சி செய்பவர்களின் மூலமாக தான் இஸ்லாம் உலக அளவில் அசுர வளர்சி பெற்றது என்பதை சிந்தனைவாதிகள் மறுக்க இயலாது
பொய்யை சொல்லியும் கூட தங்களது கொள்கையை வளர்த்த இயலாத சூழலில் உண்மையை மாத்திரமே சொல்லி பிற மக்களின் இதயத்தை ஈர்க்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ளது
ஒரு சமூகத்தை அதிகாரத்தை கொண்டு நசுக்குவதால் அந்த சமூகத்தின் கொள்கையை ஒரு போதும் அழிக்க இயலாது
மாறாக அந்த சமூகத்தின் கொள்கையை அறிவுப்பூர்வமாக எதிர்ப்பதின் மூலமாகத்தான் அந்த கொள்கையின் வலுவை மனிதர்களின் உள்ளங்களில் இருந்து இழக்க செய்ய இயலும்
இந்த சாதாரண பகுத்தறிவை கூட பெறாதவர்கள் ஆட்சியாளர்களாக இருப்பதை கண்டு நகைப்பு தான் ஏற்படுகிறதே தவிர
மாறாக கடுகளவும் கொள்கை ரீதியாக முஸ்லிம்களுக்கு அச்சம் ஏற்படவில்லை
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் விஞ்ஞானத்தால் கூட நிரூபிக்கப்படும் நிலையில் இருக்கும் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை கொள்கையாக ஏற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் இதன் மூலம் இன்னும் பெருமை படலாம்
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் நிராகரிப்பாளர்கள் ( இஸ்லாத்தை) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்
(அல்குர்ஆன் : 9:32)
يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்
(அல்குர்ஆன் : 61:8)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment