உணவு புரளி
உணவு புரளிகளும்
அறிவீனர்களின் எச்சரிக்கைகளும்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண்1291
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களின் புகைப்படத்தை பரப்பி அதன் மூலம் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் எய்ட்ஸ் நோய் பீடித்துள்ளதாக செய்தியை சித்தரிப்பது எந்தளவுக்கு அறிவீனமான செயலோ அதே போன்ற செயல் தான்
இயற்கை உணவுகளை உண்ண வேண்டும் என்று வலியுருத்துவோர் செயற்கை மூலம் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து உணவு பொருள்களையும் மனிதனுக்கு தீங்கை மட்டும் பெற்று தரும் பொருளாக சித்தரிக்கும் கயமைத்தனம்
இயற்கை பொருள்கள் மனித சமுதாயத்தின் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டிருப்பதை விட செயற்கை பொருள்கள் தான் அன்றாடம் மனித சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றி கொண்டுள்ளது என்பது தான் எதார்த்தமான உண்மை
எது போன்ற உணவு பொருள்கள் நம் நாவும் ஏற்று நம் உடலும் அந்த உணவு பொருளை ஜீரணமாக்கி கொள்கிறதோ அதை தாராளமாக உண்ணலாம் பருகலாம் என்ற சாதாரண நடைமுறை அறிவு கூட இல்லாமல் சமூகவலை தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளையும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் நம்புவதும் அவைகளை உண்மை போல் காரசாரமாக விவாதிக்கும் அர்ப்பமான செயலும் அயோக்கியத்தனமான செயலாகும்
பசும்பால் சத்து நிறைந்தது என்பது மாற்று கருத்துள்ள தகவல் அல்ல அதே நேரம் பாக்கெட் பால் விஷம் போலவும் அதை அருந்துவோர் அன்றாடம் இறந்து கொண்டிருப்பது போலவும் பூச்சாண்டி காட்டுவது அறிவீனர்களின் செயலாகும்
மென்மையான உணவுகள் உடலில் ஜீரணிக்கும் வேலையை விரைவாக செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை
அதே நேரம் அதிகமான நபர்களின் அன்றாட உணவாக இருக்கும் புரோட்டாக்களை உண்ணுவோர் அதனால் இறந்து கொண்டிருப்பது போல் பூச்சாண்டி காட்டுவது அறிவீனர்களின் செயலாகும்
செயற்கை மூலம் உருவாகும் அனைத்தும் நஞ்சு என்று பரப்பும் இவர்கள் செயற்கை மூலம் கண்டு பிடிக்கப்பட்ட மொபைல் சாதனங்கள் ஆன்ட்ராய்ட் மூலம் இயற்கைக்கு மட்டுமே அறிக்கை போட்டு சங்கூதும் செயல் அயோக்கியதனமாகும்
நீங்கள் விரும்பினால் இயற்கை உணவுகளை சுயமாக வீடுகளில் தயாரித்து உண்ணுங்கள் அதை யாரும் தடுக்கப்போவது இல்லை
அல்லது மன உறுதி இருந்தால் விநியோகம் செய்யப்படும் செயற்கை உணவுகளை உண்ணுங்கள் அதனால் கோடான கோடி மக்கள் தங்களது வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர்
செயற்கை உணவுகள் இன்றி உலகின் ஒட்டு மொத்த தேவைகளையும் மனித சமூகத்தால் நிவர்த்தி செய்ய இயலாது என்பது தான் எதார்த்த உண்மை
அதிகமான கட்டுப்பாடுகளை பின்பற்றி ஆரோக்யமான தரமான விலை உயர்ந்த உணவு பொருளை உண்ணும் கோடீஸ்வரனும் அவனது இல்லத்திற்கு Family doctor நியமனம் செய்துள்ளான்
தெருவோரங்களில் குடியிருந்து தரமற்ற இலவச உணவுகளை உண்ணும் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் மக்களில் அநேகமான நபர்களும் ஆரோக்யமாக இருப்பதை சர்வ சாதாரணமாக காண முடிகிறது
எனவே உங்களால் கூட எதை உருவாக்க சாத்தியம் இல்லையோ எதை நீங்களே தனிப்பட்ட வாழ்வில் தவிர்க்க இயலாத நிலையில் உள்ளீர்களோ அவைகளை மக்களுக்கு மாத்திரமே எச்சரிக்கை செய்யும் போலித்தனத்தை அறிவிலித்தனத்தை கை கழுவுங்கள்
இஸ்லாத்தில் உள்ள உணவு கட்டுப்பாடுகளில் ஒரே கட்டுப்பாடு ஹலால் ஹராம் எனும் இரு கட்டுப்பாடு மட்டுமே
இவை அல்லாத கட்டுப்பாடுகளை எச்சரிக்கைகளை இறைவனே விதிக்காத போது முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த வீண் பிரச்சாரம் அனாவசியமானது
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல் இது ஹலாலானது இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்
நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 16:116)
இது தொடர்பான முந்தைய ஆக்கம்
உணவு பூச்சாண்டி https://yaseenimthadhi.blogspot.com/2019/11/blog-post_24.html
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment