விரக்தியே தீயவைகளின் உரம்

     விரக்தியே தீய சிந்தனைக்கு
                           உரம்

      *****************************
                   
            கட்டுரை எண் 1281
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                       !!!!!!!!!!!!!!!!!

மனித வாழ்வில் ஏற்படும் விரக்தியின் விளைவுகள் தான் அந்த மனிதனை தவறான சிந்தனையின் பக்கமும் தவறான வழிமுறைகளின் பக்கமும் இழுத்து செல்கிறது

நல்லவனாக வாழ்ந்தவனா  இப்படி மாறி விட்டான் ❗

இந்த மனிதனா அந்த பாவத்தை செய்து விட்டான் ❗

இந்த மனிதனா அந்த கேடுகெட்டவனோடு கூட்டு சேர்ந்து விட்டான் ❗

அந்த மனிதனா தூக்கு போட்டு மாண்டு விட்டான் ❗

என்பன போன்ற ஆச்சரிய கேள்விகளுக்குள் ஒளிந்திருப்பது விரக்தி என்ற விஷம் தான்

தனிப்பட்ட மனிதனை விரக்தியின் விளைவுகள் தாக்கினால் அவனால் அவனது குடும்பம் நாசத்தை சந்திக்கும்

சமுதாய தலைவனை அல்லது ஆன்மீகவாதியை விரக்தியின் விளைவுகள் தாக்கினால் அவனால் அந்த சமுதாயம் நாசத்தை சந்திக்கும்

முயற்சிகள் பல செய்தாலும் அந்த முயற்சிக்கான வெற்றியை அல்லது தோல்வியை இறைவன் தான் தீர்மானிக்கின்றான் என்ற ஆழமான இறைநம்பிக்கை  யாருடைய உள்ளத்தில் உறுதியாக இருக்கிறதோ அவர்களை எந்த விரக்தியும் தடுமாற்றத்தை ஏற்படுத்தாது

விரக்திக்கே கடுமையான விரக்தியை ஏற்படுத்தும் வல்லமை முறையான இறை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்  அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்
ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்
இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்

          (அல்குர்ஆன் : 22:11)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்