இது தான் வாழ்வியல் சத்தியம்

    இது தான் வாழ்வியல் சத்தியம்

                 🚧 🚧 🚧 🚧 🚧

    05-11-19 J . Yaseen iMthadhi
                    
           **********************                      
            கட்டுரை எண் 1278
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                       !!!!!!!!!!!!!!!!!

முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி
முயற்சியும் உலகில் புதை குழியை நோக்ககூடும்
என்பது இஸ்லாமிய ஆன்மீக நம்பிக்கையின் முதுமொழி

உலக வாழ்வில் முயற்சி செய்து வெற்றியடைந்தோர் என்ற தலைப்புக்கு நூறு கட்டுரைகள் எழுத முடிந்தால்
அதே உலகில் முயற்சி செய்தும் வெற்றியை இழந்தோர் என்பதற்கு ஆயிரம் கட்டுரை எழுத இயலும்

காரணம் முயற்சிக்கும் வெற்றியை தரும் ஆற்றலை இறைவன் தன் கைவசமே வைத்துள்ளான் என்பதே சரியான ஆன்மீக நம்பிக்கை

இஸ்லாமிய வரலாறுகளில் நடை முறை நிகழ்வுகளில் இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் உண்டு

இந்த நம்பிக்கை கலந்த முயற்சியை ஒருவன் செய்து அதில் படு தோல்வியை அடைந்தாலும் அந்த தோல்வி அவனை உளவியல் நோயாளியாக மாற்றாது
தீய வழியின் பக்கம் தேற்றாது

பல லட்சம் செலவு செய்து பட்டம் வாங்கி முன்னேறியவர்களில் பலர்கள் படிக்காத முதலாளிகளிடம்  சம்பளம் வாங்குவதும்

IAS IPS போன்ற மேல்மட்ட படிப்புகளை படித்து பதவி உயர்வை பெற்றவர்கள் பள்ளி கூடம் படிப்பில் கூட முன்னேறாத பல அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு கட்டுபட்டு அவர்களின் முன் கைகட்டி சல்யூட் அடித்து நிற்பதும்

புலவராக கவிஞராக எழுத்தாளராக திறயைவாய்ந்த வல்லுனராக வலம் வரும் பலர்கள் வாடகை வீடுகளிலும் பிறர்களிடம் கடன் வாங்கும் சூழலிலும்  காணப்படுவதும்

விலை உயர்ந்த பொருளை வாங்கி தரமான சமையல் கலைஞரை வேலைக்கு வைத்து அந்த உணவை  உண்ணும் பலர்கள் நோயாளிகளாக இருப்பதும்

தெருவோரம் பாய் விரித்து ஏசியின்றி தூசியிலே படுத்துறங்கும் பலர்கள் ஆரோக்யமாக காலை எழுந்து வீடு தோறும்  பிச்சை எடுத்து சுற்றுவதும்

மனிதனை தாண்டிய ஒரு வல்லமை அனைத்தையும் இயக்கி கொண்டுள்ளது என்பதையும் அந்த வல்லமையின் நாட்டம் இன்றி எந்த முயற்சியும் பலன் தராது என்பது தான் வாழ்வியல் காட்சிகள் நமக்கு அன்றாடம் பாடம் சொல்கிறது

இந்த கட்டுரை மனிதன் செய்ய வேண்டிய முயற்சியை பலவீனப்படுத்துவதற்கு அல்ல

மாறாக பலம் வாய்ந்த ஒருவன் கூட தனது முயற்சியை மட்டும் மூலதனமாக வைத்து அதன் பின் தோல்லியை தழுவினால் அந்த பலமானவனின் இதயமும் பலவீனம்
அடைய கூடாது என்பதற்காகத்தான்

رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ‌ 

(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன் அர்ஷுக்குரியவன்

        (அல்குர்ஆன் : 40:15)

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏ 
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம் அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்

          (அல்குர்ஆன் : 4:54)

         நட்புடன்  J  . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்