பாபர் மஸ்ஜித் தீர்ப்பு
பாபர் மஸ்ஜித் தீர்ப்பின்
தனிச் ( ? ) சிறப்பு
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1284
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
சுதந்திர இந்தியாவில் இதுவரை வழங்கப்பட்ட தீர்ப்பில் வரலாறு காணாத தனிச்சிறப்பை பெற்று வழங்கும் ஒரே தீர்ப்பு
உலக அரங்கில் இப்படியும் நீதிகள் உண்டா என்று நீதிக்கதை எழுதிய கதாசிரியர்களே அதிசயமாக மெய்மறந்து படித்த ஒரே தீர்ப்பு
நேரடியாக இந்த தீர்ப்பின் மூலம் அநீதம் இழைக்கப்பட்டதாக கருதும் முஸ்லிம் சமூகத்தை விட முஸ்லிம் அல்லாதவர்களால் அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரே தீர்ப்பு
1 உச்ச நீதிமன்றத்தின் முன்னால் நீதிபதி அசோக்குமார் கங்குலியே விமர்சித்த தீர்ப்பு
2 அரசியல் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்காமல் அந்த சட்டத்தையே மறந்து மூடி மறைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு
3 ஆதாரங்களை நூறு சதவிகிதம் சமர்ப்பித்து அந்த ஆதாரங்களே ஏற்கதக்கது அல்ல என்று தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பு
4 பாபர் ராமர் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிவிட்டு பாபர் பள்ளி இருந்த இடத்தை பல ஆண்டு காலம் அவதூறு பரப்பியவர்களுக்கே தாரை வார்த்து கொடுத்த தீர்ப்பு
5 குடிமக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்த நம்பிக்கையை ஆழ்துளை கிணற்றில் தள்ளி மூடிவிட்டு சமமான நீதி என்று குடிமக்களை விரக்தியில் தள்ளிய தீர்ப்பு
6 நீதிக்கு குரல் கொடுத்தால் தோல்வியே அதன் விளைவு என்றும் அநீதிக்கு குரல் கொடுத்தால் வெற்றியே அதன் பரிசு என்றும் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை தோற்றுவித்த தீர்ப்பு
7 நீதியென்றால் என்னவென்று நீதிபதிகளுக்கு நீதி தேடி செல்லும் மக்களே பாடம் எடுக்கும் நிலைக்கு விமர்சனங்களுக்கு உள்ளான தீர்ப்பு
8 டெல்லியில் முதுகலை பட்டப்படிப்பில் முன்னனியில் சாதனை புரிந்த மாணவி சுரபி கர்வா என்ற இளம்பெண் பெற இருந்த தங்கப்பதக்கத்தை இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் வழங்கவுள்ளார் என்ற அறிவிப்பை கண்டவுடன் அந்த நீதிபதி கையில் தங்கப்பதக்கம் வாங்குவதை நான் விரும்பவில்லை என்று தங்க பதக்கத்தையே தகர பதக்கம் போல் மட்டமாக கருத வைத்த தீர்ப்பு
9 வருங்கால தீர்ப்புகளுக்கு தவறான முன்னுதாரணத்தை முன்னோடியாக்கிய தீர்ப்பு
****************************
வழங்கப்பட்ட தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தின் அதிருப்தியை பெற்று இருந்தாலும் ஒரு வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மகத்தான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
காரணம் இரண்டு
1 இவ்விசயத்தில் அநீதம் இழைக்கப்பட்ட நிலையில் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் இருந்தாலும் எதையும் பொறுமையோடு சகிக்கும் சகிப்பு தன்மையுள்ள சமுதாயம் என்று ஒட்டு மொத்த உலகத்தையும் எங்களை பாராட்ட காரணமாக இருந்தவர்கள் நீங்களே
2 பாபர் மன்னன் ராமருக்கு கட்டப்பட்ட கோயிலை இடித்து விட்டு தான் அந்த இடத்தில் பள்ளிவாசலை கட்டினார் என்பது பச்சை பொய் என்று இந்தியாவில் வாழும் அன்பினிய எங்கள் இந்து சமுதாய மக்களுக்கும் இதர சமுதாய மக்களுக்கும் புரியும் வகையில் தீர்ப்பளித்து எங்கள் மீது ஐம்பது வருட காலம் சுமத்தப்பட்ட வீண் கலங்கத்தை கலங்கடித்து எதிர் தரப்பாரின் பொய்யான வாதத்தை மழுங்கடித்து சட்ட ரீதியாக சுக்கு நூறாக்கி அதை ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்திய சாதனையாளர்கள் நீங்களே
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
மனித நேயமே எங்கள் நெறியாகும்
மதநல்லிணக்கமே இஸ்லாமிய மொழியாகும்
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்
நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்
(அல்குர்ஆன் : 3:120)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment