தற்கொலை

      புலனாய்வு நம் வேலையா  ?

          ••••••••••••••••••••••••••••
       14-11-19 J . யாஸீன் இம்தாதி
              ^^^^^^^^^^^^^^^^^^^^
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ               
         ★★★★★★★★★★★
      
கேரளாவை சார்ந்த பாத்திமா லத்தீப் எனும் இளம்பெண்  தற்கொலை  செய்து கொண்டாள் என்ற தகவல் உண்மை

அதற்கான காரணத்தை இனியும் காவல்துறை அதிகாரிகளே முழுமையாக விசாரித்து ஊடகத்தின் மூலம் முறையான அறிக்கையை  சமர்பிக்கவில்லை

அதற்கு முன்பே இந்த தற்கொலைக்கு ஊர்ஜிதம் செய்யப்படாத  அவசியமற்ற காரணத்தை கற்பிப்பதும் முஸ்லிம் என்ற காரணத்தால்  பெண்கள் இவ்வாறான மோசமான நிலைக்கு அதிகாரிகளால் தள்ளப்படுகிறார்கள் என்றும் வழக்கம் போல்   தேவையில்லாத அறிக்கைகளை போட்டு முஸ்லிம்கள் என்றாலே  அதிகபிரசங்கித்தனம் பிடித்தவர்கள் என்ற அவப்பெயரை தொடர்ந்து  ஏற்படுத்த வேண்டாம்

முஸ்லிம் என்று அறியாமல் இருப்பதற்கு தலையில் முக்காடு கூட என் மகள் அணியமாட்டாள் என்று அதை ஒரு காரணமாக பாத்திமா லத்தீப் பெண்ணிண் தாய் கூறும் அளவு தான் அப்பெண்ணிண் வெளிப்படையான இஸ்லாம் இருந்துள்ளது

பெற்றோர் உற்றாரிடம் கூட தனது உளவியல் பிரச்சனையை  அச்சத்தை சொல்ல தயங்கி மார்க்கம் கண்டிக்கும் பெரும் பாவமான  தற்கொலை செய்து கொள்ளும் அளவு  இப்பெண்ணிண் மார்க்க  நிலை இருந்துள்ளது

இந்த தற்கொலையின்  அந்தரங்கம் காவல் துறை அதிகாரிகளால்  வெளிச்சமாக்கப் படும் வரை நமக்கும் இந்த தகவல் ஒரு செய்தி  தானே தவிர

பிறர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சுமத்தும் அளவுக்கு நாம் புலனாய்வு துறையில் வேலை பார்ப்பவர்கள்   அல்ல

ஞானம் இல்லாத இது போன்ற விசயங்களில் புலனாய்வு செய்வதை தவிர்த்து  விட்டு நமது  அறிவுப்புலனை சீர் படுத்துவது தான் நம் கடமை

وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌  وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏ 


மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால் உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள் அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால் அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள்

அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்

அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்

                  (அல்குர்ஆன் : 4:83)



         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்