பாபர் மஸ்ஜித் ஐந்து ஏக்கர்

               ஐந்து ஏக்கர் நிலம்
        பெறலாமா விட்டு தரலாமா

        பாபர் மஸ்ஜித் கமிட்டியின்
             முடிவே  இறுதியானது

       ♦♦♦♦♦♦♦♦♦♦        

        11 -11-19  திங்கள் கிழமை          
            !!J . Yaseen iMthadhi !!
                    **************
             கட்டுரை எண் 1283
                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ               
         ★★★★★★★★★★★

பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதியான தீர்ப்பு வழங்கப்பட்டு அந்த தீர்ப்பை நாட்டு மக்களும்  குறிப்பாக முஸ்லிம்கள் மனம்  விரும்பியோ விரும்பாமலோ சலனமின்றி  ஏற்று கொண்டனர்

இந்து சமூகத்தால் ராமருக்கு கட்டப்பட்டு இருந்த கோயிலை இடித்து விட்டு தான் பாபர் அதே இடத்தில் பள்ளிவாசலை கட்டினார் என்ற பொய் பிரச்சாரம் தவிடு பொடியானது என்பது மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் பெறும் ஒரே ஆறுதல் இது தான் தேவையானதும் கூட அவ்வகையில் நீதிபதிகளுக்கு நன்றி

இழந்த பாபர் மஸ்ஜிதை மீட்க  பல வருட காலங்கள்  முஸ்லிம்கள்  ஆர்பாட்டம் போராட்டம் என்று ஜனநாயக ரீதியில்  பல விதமான தியாகங்களை செய்து விட்டனர்

இனிமேலும் அது போல் ஒரு வழிகாட்டுதலை உத்வேகப்படுத்தி   முஸ்லிம் சமுதாயத்தின் உழைப்பையும்  நேரத்தையும்  பொருளாதாரத்தையும்   எந்த இஸ்லாமிய  இயக்கமும் அமைப்பும் செய்ய கூடாது அவ்வாறு செய்தாலும் அதுவும் நாம் எதிர் பார்க்கும் பயன் தரப்போவது இல்லை

இயன்றவரை ஜனநாயக ரீதியில் போராடி அதில் நாம் எதிர் பார்த்த நியாயம் கிடைக்கவில்லை என்பதை இறைவனின் விதியாக நினைத்து முஸ்லிம்களாகிய நாம் நம்  மனதை தேற்றி கொள்வோம்
காரணம் இழந்த எந்த ஒன்றுக்கும் நன்மைகளை  மறுமையில் இறைவன் நமக்கு தராமல் இருக்கப்போவது இல்லை என்பதே இஸ்லாமிய நம்பிக்கை

தற்போது இவ்விசயத்தில் மிகவும் ஆராயப்பட வேண்டிய விசயம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாபர் மஸ்ஜித் கமிட்டிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு போட்ட  ஐந்து ஏக்கர் நிலத்தை பற்றியது தான்

பல வருடங்களாக முஸ்லிம்கள் தரப்பில் கோரப்பட்ட வழக்கில் எங்களுக்கும் அயோத்தியில் நிலம் தேவை என்று முறையீட்டை  வைத்திருந்தால் தான் தற்போது வழங்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை மனமுவந்து  பெற்று கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர இயலும்

ஆனால் ஐந்து ஏக்கர் நிலத்திற்காக இத்தனை வருடங்களாக முஸ்லிம்கள் போராடவில்லை

இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் அரசாங்கமே ஒரு பள்ளிவாசலை கட்டி கொடுத்தால் நன்று என்ற சில முஸ்லிம்களின் வாதமும் ஏற்க தகுந்தது  அல்ல

காரணம் அரசாங்கமே இடம் கொடுத்து அரசாங்கமே அவ்விடத்தில் பள்ளிவாசலை கட்டி தரும் பட்சத்தில்  இனி வருங்காலத்தில் அரசாங்கத்தின் தலையீடு ஏதாவது ஒரு வகையில் அப்பள்ளியை நோக்கி தொடரவே செய்யும் அவ்வாறு தொடர்ந்தால் அதுவும் பிற்காலத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்த கூடும்

மேலும்  ஐந்து ஏக்கர் நிலத்தை பொதுவான பாடசாலையாக மருத்துவமனையாக நாமே ஆக்கினால் நல்லது தான்  என்ற சில முஸ்லிம்களின்  வாதமும் அவசியமற்றது

ஒரு இறைவனை தொழுவதற்காக உலகில்  கட்டப்பட்டுள்ள எந்த பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின்  பொருளாதாரத்தில் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்களே தவிர முஸ்லிம் அல்லாதவர்களிடம் பணத்தை பெற்று  அல்லது பொதுவான ஒரு நிலத்தை பெற்று எந்த பள்ளிவாசலின்  கட்டிடமும்  எழுப்பப்படவில்லை

அவ்வாறு இருக்க மதசார்பற்ற நமது இந்திய  அரசாங்கத்தின் சார்பாக தரப்படும் ஐந்து ஏக்கர் நிலத்தில் இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசல் கட்டிடத்தை எழுப்புவது மன ரீதியாக இறைநம்பிக்க கொண்ட முஸ்லிம்களால் மன ரீதியாக ஏற்க இயலாது

அதே நேரம் அரசாங்கத்தின் சார்பாக தரப்படும் இடத்தை பெற்று கொள்ளத்தான் வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் நீதிபதிகள் தங்களது  தீர்ப்பில் குறிப்பிடவில்லை

இந்தியாவில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பங்கும் இனி எழுப்பப்படுகின்ற புதிய பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஏக்கம்

அவ்வகையில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட பல கோடி மதிப்பில் புதிதாக ஒரு இடத்தை விலைக்கு வாங்கி  அவ்விடத்தில் பாபர் பெயரில் பிரமாண்டமான ஒரு பள்ளிவாசலை கட்ட இயலும்

இதற்கு பொருளாதார உதவிகளை செய்ய ஒரு முஸ்லிமும் தயங்க போவது இல்லை

உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை மத்திய அரசாங்கம் பாபர் பெயரில் பொதுவான பயன்பாடு எதற்கு வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ளட்டும்

அதே நேரம் இந்திய திருநாட்டின் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் முஸ்லிம் சமுதாயத்தின் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்போம் ஏற்றுள்ளோம்

ராமருக்கு பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் அரசாங்கத்தால் எழுப்பப்படும் கோவிலுக்கு எவ்வகையிலும் முஸ்லிம்களின் தரப்பில் எதிர்ப்பும் இனி அறவே  இருக்காது என்பதை எழுத்து பூர்வமாக பாபர் மஸ்ஜித் கமிட்டி சார்பாக  பதிவாக்கிவிடுவோம்

இதுவே எனது தனிப்பட்ட ஆலோசனை

படிக்கும் உங்களுக்கும் இது சரி என்று தோன்றினால் உரிய சமுதாய  தலைவர்களுக்கு இந்த செய்தியை முறையாக  எத்தி வைக்கவும்

இந்த ஆலோசனையை ஏற்பதும் புறக்கணிப்பதும் பாபர் மஸ்ஜித் கமிடியின் அதிகாரத்திற்கு உட்பட்டதே

இறுதி முடிவு அவர்களுக்கே சொந்தம் அவர்களின் முடிவை ஏற்பதே நமது கடமை  இன்ஷா அல்லாஹ்

            நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்