மீலாது விழா
!! மீலாது விழா !!
அறிஞர்கள் பதில் தருவார்களா
♦♦♦♦♦♦♦♦♦♦
10 -11-19 ஞாயிறு கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
கட்டுரை எண் 1282
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணம் அடைந்ததற்கு பின்னால் எனது தூதருக்காக நீங்கள் வருடா வருடம் மீலாது விழாவை கொண்டாடுங்கள் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறிய ஒரே ஒரு வசனம் ஆதாரம் உண்டா ?
அல்லது நான் மரணத்தை தழுவிய பின் எனக்காக வருடா வருடம் மீலாது விழாவை கொண்டாடுங்கள் என்று நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களே முன்மொழிந்த ஆதாரங்கள் உண்டா ?
நபிகள் நாயகம்( ஸல்) அவர்களை தங்களது உயிரை விட அதிகமாக நேசித்த சஹாபாக்களில் ஒரே ஒருவராவது நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களுக்கு மீலாது விழாவை கொண்டாடினார்கள் என்பதற்கு ஒரே ஒரு வரலாற்று சான்று உண்டா ?
அல்லது சஹாபாக்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள் ,
தபஉ தாபியீன்கள் , ஹதீஸ் கலை வல்லுனர்கள் , தப்ஸீர் விரிவுரை எழுதிய இமாம்கள் , மகான்களாக போற்றப்படும் நல்லடியார்கள் , இவர்களில் யாராவது ஒருவர் மீலாது விழாவை கொண்டாடினார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் உண்டா ?
இவைகளுக்கான ஆதாரங்களை காணாது இவைகளில் இருந்து தவிர்ந்திருப்பது நபிவழியா ?
அல்லது ஆதாரமே இல்லாது போனாலும் வழமையாய் கொண்டாடப்பட்டு வருகின்ற காரணத்தால் நாங்களும் கொண்டாடியே தீருவோம் என்று கூறுவது நபி வழியா ?
தங்களை மார்க்க ஆலீம்களாக மக்கள் முன் அறிமுகம் செய்தவர்கள் இதற்கு ஆவேசம் கொள்ளாது பொருத்தமற்ற பதில்களை கூறாது ஆதாரப்பூர்வமான பதிலை தருவார்களா ?
அல்லது வழக்கம் போல் இவர்கள் எல்லாம் யூத கைகூலிகள் வழிகேடர்கள் வஹ்ஹாபிகள் நபிகள் நாயகம்( ஸல்) அவர்களை மதிக்க தெரியாதவர்கள் என்ற விமர்சன வாய்பாடை பதிலாக தருவார்களா என்ற எதிர்ப்பார்ப்போடு நானும்
وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ
(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான் உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்;
தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்
(உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்
(அல்குர்ஆன் : 2:204)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment