வீணாகும் வரிப்பணம்
வீணாகும் பல கோடி வரிப்பணம்
*********************
!!J . Yaseen iMthadhi !! 2-11-19 !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
கொந்தகையில் மக்களுக்கு பயன் தரும் அருங்காட்சியம் அமைக்க தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 12 கோடி ஒதுக்கீடு
இறந்த முன்னால் முதல்வரின் சமாதியை நினைவிடமாக மாற்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு 58 கோடி
நம் நாட்டில் வீதிக்கு வீதி யாரோ ஒருவருக்கு சமாதியோ சிலையோ இல்லாமல் இல்லை
வணங்கப்படக்கூடிய தெய்வங்களின் சிலைகளை விட வணங்க கடமை பட்ட மனிதர்களின் சிலைகள் தான் ஏராளம் உள்ளது
ஒரு கட்சி தலைவரின் மீது பிரியம் வைத்திருப்போர் தங்களது கட்சி பணத்தில் அவருக்கு எத்தனை கோடி செலவழித்து சமாதியை கட்டினாலும் மணிமண்டபம் எழுப்பினாலும் சிலைகளை நிறுவினாலும் அதனால் நாட்டுக்கும் குடிமக்களுக்கும் எவ்வித இழப்பும் இல்லை
அதே நேரம் குடி மக்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழங்கும் வரிப்பணத்தில் இருந்து பத்து ரூபாய் வீணாக செலவு செய்தாலும் அதுவும் குற்றமே என்ற சட்டம் நம் நாட்டில் இல்லை என்றே கருத தோணுகிறது
இதில் பகுத்தறிவு பேசும் கட்சிகளும் விதிவிலக்கு இல்லை
மணிமண்டபங்களும் சமாதிகளும் சிலைகளும் எவ்வகையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன் தராது என்ற பகுத்துணர்வை மக்கள் புரியும் வரை இந்திய திருநாட்டின் மக்கள் வரிப்பணம் விரயம் ஆவதை தடுக்க இயலாது
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment