இதுவும் படுகொலையே

       !!  இதுவும் படுகொலையே !!

             **********************   
                       23-10-19
            கட்டுரை எண் 1273
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                     !!!!!!!!!!!!!!!!!

எந்த தவறையும் ஜீரணிக்கும் மனிதன் பிற மனிதனை கொலை செய்வதை ஜீரணிக்க மாட்டான்
காரணம் அந்தளவு ஒரு மனிதனின் உயிர் மகத்தானது

மரணமாக துடிக்கும் மனிதனின் உயிரை நம்மால் தடுக்கவும் இயலாது உயிர் போன மனிதனுக்கு புது உயிரை நம்மால் கொடுக்கவும் முடியாது

காரணம் உயிரின் நிறம்
அதன்  மணம்
அதன் எடை
மற்றும் உயிர் எங்கிருந்து வருகிறது உடலில் எந்த இடத்தில் உயிர் தங்கி உள்ளது
எந்த இடத்திற்கு மீண்டும் மரணத்திற்கு பின் திரும்பி செல்கிறது
போன்ற கடுகளவு ஞானமும் மனிதனின் அறிவுக்கும் தெரியாது அறிவியல் மூலமும் கண்டறிய முடியாது

وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌  قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏

(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்
ரூஹு என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை எனக் கூறுவீராக

        (அல்குர்ஆன் : 17:85)

குழந்தை வேண்டாம் என்று கருதும் நபர்கள் கற்பப்பையில் கரு உருவாகாமல் இருப்பதற்கு கண்டு பிடிக்கப்பட்ட வழிமுறைகளை முற் கூட்டியே கையாள வேண்டுமே தவிர கருவில்  உருவான சிசுவை  கலைப்பதற்கும் அழிப்பதற்கும் எந்த விதமான சான்றும் குர்ஆன் ஹதீசில் இல்லை

கரு ஜனித்து நாற்பது நாட்களுக்கு முன்னால் உருவான  சிசுவை  அழிப்பது இஸ்லாத்தில் கொலை குற்றத்தில்  வராது என்பது சில அறிஞர்களின் சுய முடிவே தவிர அதற்கு எந்த விதமான சான்றும் இஸ்லாத்தில்  இல்லை

மனித கருவில் சிசுவை இறைவன் உருவாக்குவதே குழந்தையை ஜனிக்க செய்வதற்கு தான்

இதில் நாற்பது நாட்களுக்கு முன்னால்  கருவில் உருவாகி இருக்கும் சதை கட்டி மனிதன் அல்ல என்ற வாதமே ஏற்புடையது அல்ல
மாறாக மனிதன் உருவாவதற்கு இறைவன் கருவில் ஏற்படுத்தும்  முதல் நிலையே அது

சஹாபாக்களோ நபிமார்களோ அவ்வாறு ஏற்பட்ட சிசுவை அழித்தார்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை

தவறான உறவுகளின் மூலம் உருவான கருவை  அழிப்பதற்கே அதிகமானவர்கள் மெடிக்கல் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற அபாசன் மாத்திரைகளை மருத்துவரின் சட்பிகேட் இல்லாமல் வாங்கி செல்கின்றனர் என்ற காரணத்திற்காக தான் மெடிக்கல் சாப் நடத்துவோருக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது

ஆனால் அமேஜான் போன்ற ஆன்லைன் மூலம் இது போன்ற அபாசன் மாத்திரைகள் கிடைப்பது சுலபமாக விட்டது

உருவான கருவை எந்த வகையில் அழிக்க முற்பட்டாலும் அதனால் ஒரு பெண்ணிண் உடலுக்கு தான் பல வகைகளில் பலவீனமும் தீங்கும் ஏற்படும் என்பதே மறைக்கப்பட்ட உண்மை

அபாசன் மருந்து மாத்திரைகளை உட் கொள்வதால் உருவான சிசு  அழியும் என்பதும் ஊர்ஜிதம் அல்ல

மாறாக உருவான சிசு அழியவும் செய்யலாம் அல்லது இனிமேல் அதன் மூலம் ஜனிக்கும் குழந்தை குறைபாடு உடைய குழந்தையாக பிறக்கவும் செய்யலாம்

குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் இவ்விசயத்தில் மிகவும் கவனத்தை பேண வேண்டும்
மார்க்க அறிஞர்களும் இது போன்ற விசயங்களில் தவறான பத்வா கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
காரணம் சிசு அழிப்பும் படுகொலையே

وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏ 

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ‌‏ 
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது? என்று

         (அல்குர்ஆன் : 81:8-9)

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ  كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 

இதன் காரணமாகவே,நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்
மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்

             (அல்குர்ஆன் : 5:32)

சிசு கலைப்பை பற்றிய வீடியோ கேள்வி பதில்

https://youtu.be/w1gRKQxiurk

             நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்