நீங்கள் வணிகர்களா
நீங்கள் வணிகர்களா
**********************
20-10-19
கட்டுரை எண் 1272
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
நுகர்வோர் பார்வைக்கு விலையை குறைத்து தருகின்ற பொருளில் அதன் எடையை குறைத்து பொருளில் உள்ள குறைகளை மறைத்து வணிகம் செய்வது வருகின்ற இலாபத்தை நம் பார்வைக்கு பெருக்கி காட்டுமே தவிர
இறைவனின் அருளும் அவனுடைய திருப்தியும் நிச்சயம் கிடைக்காது
வணிகர்களும் இதை உணருவது இல்லை நுகர்வோர்களும் இதை சரியாக புரிவது இல்லை
மற்றவர்களை போல் நாமும் வணிகத்தில் முன்னேற வேண்டும் என்ற நினைவு தவறு இல்லை ஆனால் மற்ற வணிகர்களை கீழ்நோக்கி இறக்க செய்யப்படும் சூழ்ச்சியும் பித்தலாட்டமும் தான் தீய குணாதிசயம்
இறைவன் நமக்கு தீர்மானித்த இலாபத்தை விட கூடுதலாக எவராலும் பெறவும் இயலாது இறைவன் நமக்கு தீர்மானித்த நஷ்டத்தை எவராலும் தடுத்து நிறுத்தவும் இயலாது
இதை உள்வாங்கி கொண்டு நம் வணிகத்தில் நியாயத்தை பேணுவோம்
பொய் புரட்டு ஏமாற்றம் நம்பிக்கை துரோகம் போன்ற தீய வழிகளை தீவிரமாய் தவிர்ப்போம்
عَنْ اَبِيْ سَعيْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلتَّاجِرُ الصَّدُوْقُ الْاَمِيْنُ، مَعَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ
முழு உண்மையுடனும், நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் வியாபாரி, நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (உயிர்த் தியாகி) களுடன் இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
عَنْ رِفَاعَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِنَّ التُّجَّارَ يُبْعَثُوْنَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا، اِلاَّ مَنِ اتَّقَي اللهَ وَبَرَّ وَصَدَقَ
அல்லாஹ்வை அஞ்சி பேணுதலைக் கடைப்பிடித்து (மோசடி, சூழ்ச்சியில் ஈடுபடாமல்) நல்லது செய்து, (தன் வியாபாரம், கொடுக்கல் வாங்கலில் மக்களுடன் நன்னடத்தை மேற்கொண்டு சத்தியத்தின் மீது நிலைத்து நின்று வியாபாரம் செய்த) வியாபாரிகளைத் தவிர மற்ற வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவர் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ரிஃபாஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ مَرَّ عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலைக் கடந்து சென்ற போது தமது புனிதமான கரத்தை அக்குவியலுள் நுழைத்ததும் கையில் ஈரத்தை உணர்ந்தார்கள்
இந்த ஈரம் எப்படி வந்தது? என ரஸூலுல்லாஹி (ஸல்) அந்தத் தானிய வியாபாரியிடம் கேட்டதற்கு
யாரஸூலல்லாஹ் மழையில் தானியம் நனைந்துவிட்டது என்றார் அவர் நனைந்த தானியத்தை, அதை வாங்குபவர் பார்க்கும்படி குவியலின் மேற்பகுதியில் ஏன் நீர் மாற்றவில்லை?
எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல (என்னைப் பின்பற்றுபவரில் உள்ளவரல்ல) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் முஸ்லிம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment