ராஜேந்திர பாலாஜி

அரசியல் ஞானம் இல்லாத
      ராஜேந்திர பாலாஜி

     ***********************   
                18-10-19
        கட்டுரை எண் 1271
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 
                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!
அனைத்து சமூகத்தின் ஓட்டுக்களை வாங்கி தான் ஒரு  பதவியை அடைய முடியும் என்றால் பால்வள துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி எமலோகம் சென்றாலும் அது நடக்காத காரியம்

எந்த சமுதாயம் ஓட்டு போட்டு ஒருவர் பதவியை அடைந்தாலும் அவர் நம் நாட்டில் வாழும்  அனைத்து சமுதாய மக்களுக்கும் காவலராக உரிமைகளை பாதுகாப்பவராக இழந்த உரிமைகளை பெற்று தருபவராக தான் இருக்க வேண்டும்

அது தான் பதவியை ஏற்கும் போது வாய் மொழி மூலமாக கூறும் முதல் ஒப்பந்தம்

இந்த ஞானம் கூட இல்லாது அரசியல் களத்தில் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் பால்வளதுறை ராஜேந்திர பாலாஜி தான்

களக்காடு ஜமாத்தை சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் தன்னை  சந்திப்பதற்கு அனுமதியும் கொடுத்து விட்டு

அவரது அனுமதியை முற்கூட்டியே பெற்று கொண்டு மரியாதையோடு ராஜேந்திர பாலாஜியிடம் ரேசன் கடை விவகாரமாக  மனுவை கொடுத்த நேரத்தில்

முஸ்லிம் சமூகத்தையும்  கிருஸ்தவ சமூகத்தையும் சார்ந்த நீங்கள்
எங்களுக்கு  ஓட்டு போடாத காரணத்தால் சிறுபான்மையினரான உங்கள் மனுக்களை என்னால்  பெற முடியாது என்று கூறி
இனியும் எங்களுக்கு ஓட்டு போடாவிட்டால் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்களை அந்நியப்படுத்தப்பட்டு இருப்பது போல் தமிழகத்திலும் முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ சமூகம் ஒதுக்கி வைக்கப்படும் என்று  ராஜேந்திர பாலாஜியின் ஆணவ  கூற்று கடுமையாக கண்டிக்க தக்கது

இந்திய அரசியல் சாசன பிரகாரம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்திய நாட்டு மக்களை அவமானப்படுத்திய ஒரு குற்றவாளி

ஒரு மனிதன் தன் மனைவியோடு நின்று கொண்டு பெற்ற பிள்ளையை அழைத்தால் தான் பெற்ற பிள்ளை கூட தயக்கம் இன்றி பாசத்தோடு அவன் அருகே  ஓடி செல்லும்

மனைவியை புறம் தள்ளி விட்டு குழந்தைக்கு யார் என்ற தெரியாத
அல்லது கொடூர குணம் கொண்ட ஒரு அரக்கியின் அருகாமையில் நின்று கொண்டு  பிள்ளையை அழைத்தால் அந்த பிள்ளை கூட பாசத்தோடு அழைக்கும் பெற்றவனை மதிக்காது  நெருங்காது

அதே போல் ராஜேந்திர பாலாஜி  கூட்டு சேர்ந்துள்ள சிறுபான்மைக்கு எதிரான மதவாத கட்சியில் இருந்து தன்னை  நீங்கி  விட்டு  தனித்தோ  அல்லது பிற கட்சிகளோடு இணைந்து கொண்டோ தமிழக முஸ்லிம்களையும் சிறுபான்மை சமுதாயத்தையும்  அழைக்கட்டும்

அப்போது முஸ்லிம் சமூகமும் சிறுபான்மை சமூகம் ராஜேந்திர பாலாஜியை வரவேற்கும்

ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தின் வெறுப்பை சம்பாரித்து வரும் அதிமுக கட்சி ராஜேந்திர பாலாஜி போன்ற அரசியல் ஞான சூனியங்களை மதவெறியர்களை தேர்தல் களத்தில் இறக்கி இருப்பதின்  மூலமும் அதிமுக  அரசியலில் மிக விரைவில்  அனாதையாக ஆக்கப்படும் என்பதை நினைவில் வையுங்கள்

https://youtu.be/l4wfoX1c2ck

  இப்படிக்கு  J . இம்தாதி



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்